Homeசெய்திகள்75 வது குடியரசு தின விழா: சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இந்தியா வருகை..!

75 வது குடியரசு தின விழா: சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இந்தியா வருகை..!

நாட்டின் 75 வது குடியரசு தினவிழாவிற்கு (75th Republic Day) சிறப்பு விருந்தினராக வருகை தர உள்ளார் (75th Republic Day Chief Guest ) பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான். இதற்கு முன்பு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் வருவதாக தகவல் வெளியானது. ஆனால் அவரால் வரமுடியாத காரணத்தால் தற்போது பிரான்ஸ் அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

பிரான்ஸ் இந்தியா ஆகிய இரு நாடுகளின் உறவானது கடந்த காலங்களில் இருந்தே நல்லுறவாக தொடர்ந்து வருகிறது. இந்திய விமானப்படையில் வலிமையான விமானமாக கருதப்படும் ரஃபேல் விமானங்கள் பிரான்ஸ் நாட்டில் தான் வாங்கப்பட்டது. கடந்த ஜீலை மாதம் பிரன்ஸ் நாட்டில் நடைபெற்ற பேஸ்டில் அணிவகுப்பில் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட இமானுவேல் பிரதமர் மோடியுடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடினார். இந்த பேச்சுவார்த்தை மூலம் அவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கலாம் என தெரியவருகிறது. கடந்த ஆண்டு எகிப்து அதிபர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி அவரது X தளப்பக்கத்தில் 75வது குடியரசு தினத்தில் தலைமை விருந்தினராக உங்களை வரவேற்பதில் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்தியா-பிரான்ஸ் மூலோபாய கூட்டாண்மை மற்றும் ஜனநாயக விழுமியங்களில் பகிரப்பட்ட நம்பிக்கையையும் கொண்டாடுவோம் என பதிவிட்டுள்ளார். இதற்கு பிரான்ஸ் அதிபர் (French President Emmanuel Macron) நன்றி என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: மோடி ஆட்சியில் மற்றுமொரு சாதனை..! தமிழகத்திற்கு மீண்டும் கிடைத்த பொக்கிஷம்..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular