Homeசினிமாநடிகை ராஷ்மிகா பிறந்தநாளில் வெளியான புதிய படத்தின் போஸ்டர்…

நடிகை ராஷ்மிகா பிறந்தநாளில் வெளியான புதிய படத்தின் போஸ்டர்…

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் பிரபல கதாநாயகியாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இன்று (05.04.2024) இவரின் பிறந்தநாள் (Rashmika Mandanna birthday). இவரின் பிறந்த நாளை முன்னிட்டு இவர் தற்போது நடித்து வரும் தி கேர்ள் பிரண்ட் (The Girlfriend) என்ற படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

தொலுங்கு மொழியில் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியான கீத கோவிந்தம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ராஷ்மிகா. அதன் பிறகு நடிகர் அல்லு அர்ஜுன், விஜய், கார்த்தி, மகேஷ் பாபு மற்றும் ரன்வீர் கப்பூர் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து பான் இந்தியா படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் தற்போது நடித்துவரும் படம் தான் தி கேர்ள் பிரண்ட். இந்த படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார். இந்த படம் கதாநாயகியை மையமாக கொண்டு எடுக்கப்படுகிறது என கூறப்படுகிறது. இந்த படம் அனைத்து வயதினருக்கும் பிடிக்கும் வைகயில் தயாராகி வருகிறது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்திற்கு அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.

Rashmika Mandanna birthday

Rashmika Mandanna தனது 28 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் ராஷ்மிகா மந்தனாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் (The Girlfriend first Look Poster) வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் என்றும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்க வாழ்த்துகள். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ராஷ்மிகா மந்தனா என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க: விபத்தில் சிக்கிய தல அஜித்.. விடாமுயற்சியின் போது விபரீதம்..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular