Homeதொழில்நுட்பம்Realme C67 5G New Launch: வெறும் 14000 ரூபாயில் புதிய அறிமுகம்…

Realme C67 5G New Launch: வெறும் 14000 ரூபாயில் புதிய அறிமுகம்…

Realme நிறுவனம் பல வகையான புதிய அம்சங்களுடன் அனைத்து மக்களுக்கும் பொருந்தும் படியான பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. இதன் மூலம் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு அர்ப்புதமான படைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நிறுவனம் தற்போது புதிய ரியல்மீ சி67 5ஜி (Realme C67 5G) என்ற புது வகையான ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் ரியல்மியின் சி சீரிஸில் (Realme’s C series) முதல் 5ஜி போன் ஆகும். இந்த வகை மாடல் போனில் ஆப்பிளின் டைனமிக் ஐலேண்ட் போலவே இருக்கக்கூடிய மினி கேப்சூல் 2.0 அம்சம் உள்ளது.

அதுமட்டுமின்றி 2400 x 1080 பிக்சல் ரெசல்யூஷன் (Pixels Resolution) உடன் 6.72 இன்ச் எப்எச்டி+ அல்ட்ரா ஸ்மூத் டிஸ்பிளே இந்த மொபைலில் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் இந்த மொபைலில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 550 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது.

இந்த போனின் பாதுகாப்பிற்காக சைடு மௌண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side mounted finger print sensor) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் Face Lock மற்றும் ஐபி 54 ரேட்டிங் உள்ளது. இதன் அதீத செயல்திறனுக்காக மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ என்கிற 5G சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மொபைலில் டபுள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது.

Realme C series

இந்த மொத்த கேமராவில் 50 எம்பி மெயின் கேமராவும் 2 எம்பி டெப்த் கேமராவும் அடங்கும். அதுமட்டுமின்றி செல்ஃபிக்காக 8 எம்பி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 33 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் கூடிய 5000mAh பேட்டரி இந்ந போனில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வெறும் 29 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்ய முடியும்.

ரியல்மீ சி67 5ஜி யின் விலை (Realme C67 5G Price)

இந்த மாடல் ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மொபைல் இந்தியாவில் ரூ.13,999 என்கிற விலையில் விற்க்கப்பட்வுள்ளது. மேலும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட போன் ரூ.14,999 என்கிற விலையிலிருந்து தொடங்குகிறது. இந்த போன் இரண்டு வேறுபட்ட வண்ணங்களில் கிடைக்கிறது. அவை சன்னி ஒயாசிஸ் மற்றும் டார்க் பர்பிள் என இரண்டு வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது.

விற்பனை தொடங்கும் நாள்

இந்த வகையான ஸ்மார்ட்போன் நம் இந்தியாவில் டிசம்பர் மாதம் 20-ம் தேதி முதல் அனைத்து ரியல்மீ இணையதளம் (Realme website) மற்றும் ஃபிளிப்கார்ட் (Flipkart) மூலம் விற்பனைக்கு வரவுள்ளது.

இந்த விற்பனையின் போது இந்த மாடல் ஸ்மார்ட்போனிற்கு ரூபாய் 1,500 வரை தள்ளுபடி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன் Early Access டிசம்பர் மாதம் 16-ம் தேதி மதியம் 12 மணியிலிருந்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் ரூபாய் 2,000 வரை சலுகைகளைப் பெறலாம்.

Realme C67 5G

Realme New Launch: ரியல்மீ நிறுவனம் அதன் புதிய மாடல் மொபைலை வெறும் 14000 ரூபாய்க்கு விற்பனையை செய்யவுள்ளது.

Product Brand: Realme

Product Currency: INR

Product Price: 13999

Product In-Stock: PreOrder

Editor's Rating:
4.49
இதையும் படியுங்கள்: UPI-ல் ரூ.2000 க்கு மேல் இனி அனுப்ப முடியாது… அரசின் புதிய விதிமுறை..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular