Homeசெய்திகள்கோடைகாலத்தில் வெயிலை விட அதிகரிக்கும் AC மின் கட்டணம்… செலவை குறைக்க எத்தனை Ton AC...

கோடைகாலத்தில் வெயிலை விட அதிகரிக்கும் AC மின் கட்டணம்… செலவை குறைக்க எத்தனை Ton AC வாகங்க வேண்டும்…

கோடை காலம் வந்தாலே அனைவரின் பிரச்சனையாக இருந்த சுட்டெரிக்கும் வெயில் தான். இந்த கோடை வெயிலில் இருந்து தப்பிக்க அனைவரும் அவர்கள் வீடுகளில் AC வாங்கி பயன்படுத்துவார்கள். அவ்வாறு புதிதாக AC வாங்குபவர்களுக்கு பிரச்சனையாக காத்திருப்பது மின் கட்டனம் தான். எத்தனை Ton AC வாங்கினால் மின் கட்டணம் குறையும் என்பதை பற்றிய சில டிப்ஸ்களை (Min Katanathai Kuraippathu Eppadi) இந்த பதிவில் பார்க்கலாம்.

கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியான பானங்களை குடிக்க விரும்புவார்கள். அதேபோல் குளிர்ச்சியான காற்று வாங்கேவ விருமப்பிவார்கள். கோடைகாளத்தில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக வீட்டிற்கு AC வாங்குவது தற்போது வழக்கமாகி வருகிறது.

ஏசி வாங்குவதை விட நம் பட்ஜெட்டிற்கு ஏத்தபடி மற்றும் மின்சாரம் குறைவாக பயன்படுத்தும் வகையில் ஏசி வாங்குவது தான் மிக கடினமாக பார்க்கப்படுகிறது. வீட்டில் நீண்ட நேரம் ஏசி ஓடினாலும் மின் கட்டணம் (Electricity bill) அதிகரித்துவிடும் இதை தவிர்ப்பது எப்படி என்பதை (How to Use an Air Conditioner) பார்க்கலாம்.

முதலில் நாம் Air Conditioner வாங்கும் போது சில தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நம்மால் பலமுறை ஏசி வாங்க முடியாது. நாம் எங்கு ஏசி வாங்கலாம், எத்தனை டன் ஏசி வாங்கலாம் மற்றும் எத்தனை ஸ்டார் ஏசி வாங்கினால் நல்லது போன்ற பல கேள்விகள் நம் மனதில் இருக்கும். அதற்கான பதில் இந்த பதிவில் உள்ளது.

நம் வீடுகளில் பொதுவாக டொமஸ்டிக் மின்சார லைன்தான் (Domestic Electricity Line) தரப்பட்டு இருக்கும் நாம் ஏசிக்கு தேவையான Preload இருக்காது. எனவே நாம் ஏசி வாங்கும் முன் மின்வாரிய அலுவலகத்தில் Preload நீட்டிப்புக்காக கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

ஆனால் தற்போது நகர்ப்புறங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏசி பயன்படுத்தும் வகையில் லைன் தரப்பட்டுள்ளது. அப்படி இருந்தால் நீங்கள் உங்கள் எலக்கட்ரீஷியனிடம் கேட்டு ஏசி பொருத்திக்கொள்ளலாம்.

Air Conditioner

ஏசி பொருத்துவதற்கு முன் எர்த்திங் (Earthing) சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். அதன் பிறகு Ventilator இருந்தால் அது சரியாக நிறுவப்பட்டு உள்ளதா என்பதையும் சரிபார்க்க வேண்டும்.

Air Conditioner பொருத்தியுள்ள அறையின் ஜன்னல் மற்றும் கதவுகளுக்கு இடையில் இடைவெளிகள் இல்லாமல் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் அவ்வழியாக ஏசி காற்று வெளியேறும். இதனால் மின் கட்டணம் அதிகரிக்கும்.

வீட்டில் ஏசி பொருத்தியுள்ள அறையானது 150 சதுர அடி அல்லது அதற்கு அதிகமாக இருந்தால் 1.5 டன் ஏசி அந்த அறையில் பொருத்த வேண்டும். தற்போது ஆட்டோமேட்டிக் ஏசிகள் (Automatic AC) விற்கப்படுவதால் 1.5 டன் ஏசி விரைவில் குளிர்ச்சி அடைந்து விடும் இதனால் மின் கட்டணம் குறைவாக வாய்ப்புகள் உள்ளது.

அதன் பிறகு ஏசி வாங்கும் போது பார்க்கப்படுவது 3 Star AC அல்லது 5 Star Ac வாங்கலாமா என்பது தான். இந்த இரண்டு ஏசிகளுக்கும் விலையில் பெரிய வித்தியாசம் உள்ளது. ஆனால் 5 Star Ac ஆனது 3 Star Ac -யை விட குறைவான மின்சாரத்தையே பயன்படுத்தும்.

மேலும் படிக்க: நடிகை ராஷ்மிகா பிறந்தநாளில் வெளியான புதிய படத்தின் போஸ்டர்…
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular