HomeசினிமாSiren Movie Box Office Collection: வசூலை குவித்து வரும் சைரன்..!எத்தனை கோடி தெரியுமா?

Siren Movie Box Office Collection: வசூலை குவித்து வரும் சைரன்..!எத்தனை கோடி தெரியுமா?

கோலிவுட்டில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இவர் பல வெற்றி படங்களில் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவருடைய படங்கள் அனைத்தும் நல்ல கதைக்களத்துடன் இருக்கும். மேலும் இவரின் நடிப்பு படத்திற்கு படம் மாறுபடும். கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாகவே மாறிவிடுவார் என்று தான் கூறவேண்டும். அந்த அளவிற்கு இவர் நடிப்பு இருக்கும்.

இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் இவரது நடிப்பை நாம் அனைவரும் பார்த்து இருப்போம். இந்த படத்தில் இவர் தான் பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். இந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தான் சமீபத்தில் இவர் நடிப்பில் சைரன் படம் வெளியானது.

இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி திலகன் என்னும் குற்றவாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படம் திரையரங்குகளில் நல்ல முறையில் ஓடி வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் வசூல் பற்றி இப்பதிவில் (Siren Movie Box Office Collection) பாரக்கலாம்.

இப்படம் வெளியாவதற்கு முன்பே இப்படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்தை அதிகப்படுத்தியது. மேலும் எதிர்பார்ப்பிற்கு ஏற்றார்போல் படமும் இருந்த காரணத்தால் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். எனவே படம் வசூலிலும் நல்ல ஓப்பனிங்கை தான் பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது இப்படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் (Siren Movie Vasool) செய்த்துள்ளது என்று பார்க்கலாம்.

முதல் நாள்1.40 கோடி
இரண்டாம் நாள் 2.08 கோடி
மூன்றாம் நாள்2.08 கோடி
Siren Movie Vasool

சைரன் திரைப்படம் (Siren Movie) வெளியான முதல் நாளில் 1.40 கோடி வசூல் செய்துள்ளது, 2-ம் நாளில் 2.08 கோடி மற்றும் 3-ம் நாளில் 2.08 கோடியும் வசூல் செய்துள்ளது. இதன்படி பார்த்தால் இப்படம் வெளியான மூன்று நாட்களில் உலகம் முழுவதும் 5.56 கோடி வசூல் செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Siren Movie Review in Tamil: உணர்வுபூர்வமான கதைக்களத்தில் சைரம்..! படம் எப்படி இருக்கு..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular