Homeசெய்திகள்அடுத்த ஆண்டு களமிறங்கும் 300-கிலோ அரக்கன்..! அறிமுகப்படுத்தினார் மத்திய இணை அமைச்சர்..!

அடுத்த ஆண்டு களமிறங்கும் 300-கிலோ அரக்கன்..! அறிமுகப்படுத்தினார் மத்திய இணை அமைச்சர்..!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையான இஸ்ரோ, விண்வெளி தொடர்பான ஆய்வுகளை செயற்கைக்கோள் மூலம் மேற்கொண்டு வருகிறது. இஸ்ரோ அவ்வப்போது தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்தி வந்தது. இதனால் பல்வேறு தனியார் நிறுவனங்களும் விண்வெளி துறையில் ஆர்வம் காட்டி வந்தனர்.

தெலுங்கான மாநிலம் ஐதராபாத்தில் உள்ள Skyroot Aerospace தனியார் நிறுவனத்தை இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானிகள் பவன் குமார் சந்தானா, நாக பாரத் டாக்கா ஆகியோர் கடந்த 2018-ஆம் ஆண்டு திறந்து வைத்தனர். இந்நிறுனத்திற்கு ஏவுதளம், ஒருங்கமைப்பு, கண்காணிப்பு, தகவல் தொடர்பு ஆகியவற்றை இஸ்ரோ மேற்கொண்டு வந்தது.

கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி காலை 11.30 மணிக்கு ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தயாரித்த 2.5 கிலோ எடையுள்ள பான் – சாட் என்ற செயற்கைக்கோளை விக்ரம்-எஸ் (Vikram-S) ராக்கெட் சுமந்து சென்றது. இதற்கான அனைத்து வேலைகளும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து செய்யப்பட்டது. இதன் மூலம் விண்ணில் ராக்கெட்டை செலுத்தும் முதல் இந்திய தனியார் நிறுவனம் என்ற பெருமையை பெற்றது ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனர் டாக்டர். விக்ரம் சாராபாய்க்கு மரியாதை செலுத்தும் விதமாக ஸ்கைரூட் ஏர்ரோஸ்பேஸ் நிறுவனத்தில் தயாரிக்கும் ராக்கெட்டுகளுக்கு விக்ரம் என பெயர் சூட்டப்படுகிறது.

ஸ்கைரூட் நிறுவனம் விக்ரம்-1 ராக்கெட்டை தயாரித்துள்ளது. இந்த ராக்கெட் சுமார் 300 கிலோ கிராம் கொண்ட செயற்கைக்கோள்களை குறைந்த புவி சுற்றுபாதையில் நிலைநிறுத்தக் கூடியது. அது மட்டுமன்றி இந்த ராக்கெட்டை மீண்டும் பயன்படுத்த கூடிய வடிவில் தயாரித்துள்ளனர். இதனால் விண்வெளி செலவு பயணம் மிச்சப்படுத்த முடியும். கார்பன் ஃபைபர் கலவை கொண்டு இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிக குறைந்த காலத்தில் ஒரு பொருளை தயாரிக்க உதவும் 3D பிரிண்டிங் தொழில்நுட்பம் கொண்டு ராக்கெட் வடிவமைக்கப்பட்டிருப்பதால் எரிபொருள் செலவையும் மிச்சப்படுத்தலாம் என்பது கூடுதல் தகவலாக உள்ளது.

Dr. Jitendra Singh launched vikram-1

இரண்டாயிரம் சிறிய செயற்கைக்கோள்களை தங்கள் ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்துவதை குறிக்கோளாக கொண்டுள்ளது என ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்தது. இந்நிலையில் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் புதிய தலைமையகத்தை திறந்து வைத்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த விழாவின் போது விக்ரம்-1 (Vikram-1) ராக்கெட்டை அறிமுகப்படுத்தினார்.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular