Homeசெய்திகள்திருவண்ணாமலை கிரிவலம்..! சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

திருவண்ணாமலை கிரிவலம்..! சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த திருவண்ணாமலையில் உள்ள மலையை சிவபெருமானாக பாவித்து அருணாச்சலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள மாலையை சுற்றி 14 கிலோமீட்டர் தொலைவு கிரிவல பாதையில் பக்தர்கள் கிரிவலம் (Tiruvannamalai Girivalam Path) செல்வார்கள்.

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் பெளர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் கிரிவலம் செல்வது வழக்கம். அதிலும் சிறப்பு வாய்ந்த ஆருத்ரா, போன்ற தினங்களில் கிரிவலம் செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நாளை (ஏப்ரல் 23) சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரவலம் மேற்கொள்வார்கள். சித்ரா பெளர்ணமி கிரிவலத்திற்கு வரும் பக்கதர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tiruvannamalai Girivalam Special buses 2023

இந்நிலையில் திருவண்ணாமலை சித்ரா பெளர்ணமி கிரிவலத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க (Tiruvannamalai Girivalam Special buses 2024) திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதனால் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து இன்று (ஏப்ரல் 22) தேதி 527 பேருந்துகளும் மற்றும் (ஏப்ரல் 23) நாளை 628 பேருந்துகளும் இயக்கப்படும் என்றும், மேலும் சென்னை மாதாவரத்திலிருந்து இன்று 30 பேருந்துகளும், நாளை 30 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பக்தர்கள் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மதுரை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், நெல்லை, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூருவிலிருந்து முன்பதிவு செய்து பயணித்துக் கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று 910 பேருந்துகளும், நாளை 910 பேருந்துகளுகம் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 40 குளிர்சாதன வசதிக் கொண்ட பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்து இன்றும் மற்றும் நாளை திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது.

மேலும் படிக்க: மார்கழி திருவாதிரை விரதம்..! Thiruvathirai Viratham in Tamil
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular