Homeசெய்திகள்சிறப்பு முகாம்: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யலாம்..!

சிறப்பு முகாம்: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யலாம்..!

மக்களவை தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியலை கடந்த மாதம் (அக்.27) வெளியிட்டார் தமிழக தேர்தல் ஆணைய அதிகாரி சத்யபிரத சாகு. தமிழகத்தில் மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர், இதன்படி ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே தமிழநாட்டில் அதிகம் உள்ளனர் என தெரியவந்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி அடுத்த வரும் ஜனவரி முதல் தேதியை வாக்காளராக தகுதி பெறும் தேதியாக கொண்டு, 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் தங்களது பெயரை வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். 2024 ஆம் ஆண்டு ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் முதல் தேதியில் 18 வயது பூர்த்தியாக உள்ளவர்களும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என Election Commission தெரிவித்துள்ளது.

Special Camp for Voter List Correction

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் கடந்த மாதம் அக்டோபர் 27ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. புதிதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கும், வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் மற்றும் நீக்கம் செய்ய விரும்புபவர்களுக்கும் உதவும் வகையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நவம்பர் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதுமட்டும் இன்றி நவம்பர் 18 மற்றும் 19 ஆம் தேதிகளிலும் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் வாக்காளர் அடையாள அட்டைக்கு புதிதாக விண்ணப்பிக்க, வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் மற்றும் நீக்கம் செய்வதற்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ eci.gov.in இணையதளம் மூலமாகவும் அல்லது Voter Helpline App என்ற செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular