Homeசெய்திகள்பல வருடங்களுக்கு பிறகு அம்பேத்கரின் கனவை நிறைவேற்றிய உச்சநீதிமன்றம்..!

பல வருடங்களுக்கு பிறகு அம்பேத்கரின் கனவை நிறைவேற்றிய உச்சநீதிமன்றம்..!

அம்பேத்கர் அவர்களின் இயற்பெயர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (Bhimrao Ramji Ambedkar) ஆகும். இவர் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி பிறந்தார். இந்திய நாட்டின் விடுதலைக்குப் பின் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றார். இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது இவரது இறப்புக்குப் பின் 1990-ம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.

சில வருடங்களுக்கு முன் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசால் (பாஜக) ரத்து செய்யப்பட்டது. அப்போதே மேல்முறையீடு செய்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது செல்லும் என்று நேற்று (11.12.2023) தீர்ப்பை வழங்கியது.

இந்த தீர்ப்பின் மூலம் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது செல்லும் என்று உச்சநீதி மன்றம் கூறியுள்ளது. இந்த குறித்து சுகாதார துறை முன்னாள் அமைச்சர் மற்றும் சுதந்திர போராட்ட வீரரான டாக்டர் ஹண்டே (Dr. HV Hande)  தன் கருத்தை கூறியுள்ளார்.

370-வது சட்டம் படி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது, எனவே இந்திய அரசியலமைப்பின் தந்தையான அம்பேத்கரின் விருப்பம் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேறியுள்ளது.

Dr. HV Hande

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய போது, நான் கல்லூரி பயிலும் மாணவனாக இருந்தேன் என்றும் அவர் கூறியுள்ளார். அப்போது இச்சட்டம் குறித்து வெளியான செய்தித்தாள் தகவல்கள் கூட இருப்பதாக கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி இது குறித்து பல புத்தகங்கள் எழுதப்பட்டு உள்ளன. அப்புத்தகங்களின் அடிப்படையில் தான் ‘370 சட்டத்திருத்தம்’ என்ற நூலை அவர் எழுதியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்: ஜம்மு காஷ்மீர் வழக்கு 370-சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும்
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular