Homeசெய்திகள்ஜம்மு காஷ்மீர் வழக்கு 370-சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும்..! உச்சநீதிமன்றம் அதிரடி..!

ஜம்மு காஷ்மீர் வழக்கு 370-சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும்..! உச்சநீதிமன்றம் அதிரடி..!

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது செல்லும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். 370-வது சட்டப்பிரிவு (Jammu and Kashmir its Special Status Article 370) நிரந்தரமானது அல்ல என்றும் தற்காலிகமானது எனவே அந்த சட்டப்பிரிவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் 3 விதமான தீர்ப்புகளை வழங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து என்ன, உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை காணலாம்.

1947-ல் இந்தியா – பாகிஸ்தான் என்ற பிரிவினையாக கொண்ட காலம் அது. அந்த சமயத்தில் பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீரை தனது நிலப்பரப்புடன் சேர்க்க எண்ணியது. எனவே பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்தது. ஆனால் ஜம்மு காஷ்மீரின் அப்போதைய கடைசி மன்னர் ஹரிசிங் தனது மக்கள் சுதந்திரமாக இருக்க விரும்பினார். அதனால் அவர் இந்தியாவுடன் இணைய ஒப்புக்கொண்டார். இதன் மூலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியது ஜம்மு காஷ்மீர்.

அப்போது ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தால் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த பிறகு 370-சட்டப்பிரிவு படி அப்போதைய சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.

சிறப்பு அந்தஸ்து மூலம் ஜம்மு காஷ்மீருக்கு கிடைத்தது (Jammu and Kashmir’s Special Status)

ஜம்மு காஷ்மீர் வழக்கு 370
  • இந்தியா நாட்டில் மாநில சுயாட்சியை அதிக அளவு கொண்ட மாநிலமாக ஜம்மு காஷ்மீர் உள்ளது. இதில் ராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு துறை போன்றவை மட்டும் தான் மத்திய அரசால் செயல்படுத்த முடியும். மற்றப்படி எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது அம்மாநில அனுமதி இல்லாமல் செயல்படுத்த முடியாது.
  • அந்த மாநிலத்தில் ஆளுநரை நியமிக்கும் போது அம்மாநில முதல்வரின் ஆலோசனைக்கு பிறகு தான் நியமிக்க முடியும்.
  • பெண்கள் அம்மாநிலத்தை தவிர வேறு எந்த மாநிலத்தில் திருமணம் செய்து கொண்டாலும் அவர்கள் நிலம் வாங்கும் உரிமையை இழந்துவிடுவார்கள். ஆனால் ஆண்களுக்கு அவ்வாறு இல்லை.
  • ஜம்மு காஷ்மீரில் மட்டும் அதற்கென தனி கொடி உள்ளது. ஆனால் இந்திய தேசிய கொடியுடன் சேர்த்து தான் ஏற்ற வேண்டும்.
  • இந்த மாநிலத்திற்கு தனி அரசியல் சாசனம் உண்டு.
  • ஜம்மு காஷ்மீரின் பதவி காலம் 6 ஆண்டுகள் ஆகும்.
  • அரசியல் சாசனம் 238 பிரவு இந்த மாநிலத்தில் பொருந்தாது.
  • இந்தியா முழுவதும் ஜனாதிபதியால் அவசர பொருளாதார நிலை 360-வது பிரிவு அமல்படுத்த முடியும். ஆனால் ஜம்முவில் அதை பிரகடனப்படுத்த முடியாது.
  • ஜம்மு காஷ்மீரில் தனி சட்டசபை வைத்துக் கொள்ள முடியும்.

இத்தகைய அதிகாரங்கள் 370-வது சட்டப்பிரிவில் வழங்கப்பட்டாலும், அது தற்காலிகமானது தான். இந்த சிறப்பு அந்தஸ்து மத்திய அரசால் (பாஜக) 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதனை எதிர்த்து தொடங்கப்பட்ட வழக்கில் இன்று தான் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். அதுமட்டுமல்லாமல் ஜம்மு காஷ்மீர் – லடாக் என இரு யூனியன் பிரேதசங்களாக பிரிக்கப்பட்டது.

அதாவது இந்த வழக்கிற்கான தீர்ப்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் வழங்கியுள்ளனர். இதில் 3 விதமான தீர்ப்புகள் ஒரே மாதிரியாக வழங்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்தது செல்லும் என்றும், 2 யூனியன் பிரேதசங்களாக பிரித்தது செல்லும் என்றும், ஏனென்றால் 370-வது சட்டப்பிரிவு தற்காலிகமான ஒன்று என தீா்ப்பளித்தனர்.

அதுமட்டுமல்லாமல் அம்மாநிலத்தில் வரும் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அதற்கு இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்ய வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மற்ற மாநிலங்களில் இருந்து தனி இறையாண்மையைக் கொண்டிருக்கவில்லை எனவும் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளனர்.

மேலும் படிக்க: சோப்பு விற்பனையில் களமிறங்கிய இந்தியாவின் மிகப்பெரிய IT நிறுவனம் Wipro
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular