Homeசெய்திகள்தீபாவளி பலகாரங்களுக்கு புதிய ரூல்ஸ்...தமிழக அரசின் டிவிஸ்ட்

தீபாவளி பலகாரங்களுக்கு புதிய ரூல்ஸ்…தமிழக அரசின் டிவிஸ்ட்

வருடம் முழுவதும் பல பண்டிகைகள் கொண்டாடப் பட்டாலும் பலரின் விருப்பமான பண்டிகையாக இருப்பது Deepavali பண்டிகை தான். ஏன்னென்றால் தீபாவளி அன்று நடைப்பெறும் நிகழ்வுகள் தான். அவற்றில் புதிய ஆடைகள், பட்டாசுகள், மத்தாப்புகள் இவை மட்டும் இன்றி அன்று கிடைக்கும் பள்ளி, கல்லூரிகள் மட்டும் இன்றி நிறுவனங்களின் விடுமுறை என பலவற்றினை கூறலாம். ஆனால் இவைகள் அனைத்துக்கும் மேல் தீபாவளி என்றேலே அனைவருக்கும் தோன்றுவது பலகாரங்கள் தான்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இப்பண்டிகை நாடு முழுவதும் சிறப்பான முறையில் கொண்டாடப்படும். தீபாவளி அன்று பட்டாசுகள் பிரபலம், ஆனால் நாம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும், எனவே நாம் பசுமை பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும், இதனை மத்திய, மாநில அரசுகளும் அறிவுறுத்தியுள்ளன. அடுத்த படியாக புத்தாடைகளும், புதிய டிசைன்களும் என்று ஜவுளிக் கடைகளில் கூட்டம் அலைமோதும்.

Deepavali Festival

இதன் பிறகு தீபாவளி ஸ்பெஷல் என்றால் பலகாரங்கள், ஸ்வீட்ஸ், காரம் எனப் பல்வகையான திண்பன்டங்கள் பேக்கரிகளில் விற்க தொடங்கிவிடுவர். ஆனால் இந்த வருடம் கடைகளில் பலகாரங்கள் தயாரிக்க லைசன்ஸ் பெற வேண்டும் என்றும், அதன் பிறகு தான் பலகாரங்கள் தயாரிக்க வேண்டும் என்றும் புதிய விதியினை மாநில அரசு கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து மாநில உணவு பொருள் பாதுகாப்பு துறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. எனவே பேக்கரிகள் லைசென்ஸ் பெற்றால் தான் பலகாரங்கள் தயாரிக்க வேண்டும். இல்லை என்றால் பலகாரங்கள் தயாரிக்க அனுமதி இல்லை என்று உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.

பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அதில் பேக்கரிகள், தனியார் கடை உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, இந்த கூட்டத்தில் இனிப்பு தயாரித்தல், பேக்கிங் செய்யும் முறை ஆகியவை விளக்கமாக கூறப்பட்டது. இந்த கூட்டத்தில் இனிப்பு தாயரிக்க சில விதிமுறைகளும் கூறப்பட்டன. அவை தீபாவளி இனிப்புகள் தரமாகவும், சுகாதாரமாகவும் தயாரிக்கபட வேண்டும். செயற்கையாக நிறம் எதும் சேர்க்கக் கூடாது. இவற்றை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular