Homeசெய்திகள்கிரிவலம் செல்வதற்கான சரியான நேரம்..! கோவில் நிர்வாகம் வெளியிட்ட தகவல்..!

கிரிவலம் செல்வதற்கான சரியான நேரம்..! கோவில் நிர்வாகம் வெளியிட்ட தகவல்..!

திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்கு உகந்த நேரத்தை திருவண்ணாமலை அருணாச்சலேஷ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த திருவண்ணாமலையில் உள்ள மலையை சிவபெருமானாக பாவித்து அருணாச்சலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோமீட்டர் தொலைவு கிரிவல பாதையில் பக்தர்கள் கிரிவலம் (Tiruvannamalai Girivalam Path) செல்வார்கள்.

நாளை (ஏப்ரல் 23) சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சித்ரா பெளர்ணமி கிரிவலத்திற்கு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அந்தவைகயில் நாளை புனித சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு லட்சணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்ள உள்ளனர். கிரிவலத்திற்கான பிரதான நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தாண்டு, சித்ரா பெளர்ணமி (chitra pournami girivalam 2024) ஏப்ரல் 23 ஆம் தேதி, அதிகாலை 4,16 மணிக்கு தொடங்கி ஏப்ரல் 24-ஆம் தேதி காலை 5.47 மணிக்கு முடிவடைகிறது. எனவே ஏப்ரல் 23 ஆம் தேதி முழுவதும் கிரிவலம் வரலாம் என பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் தவல்களுக்கு கோயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

chitra pournami girivalam 2024
மேலும் படிக்க: திருவண்ணாமலை கிரிவலம்..! சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular