Homeதொழில்நுட்பம்Most Deleted App in 2023: இந்த ஆப் தானா..! வெளியான அதிர்ச்சி தகவல்..!

Most Deleted App in 2023: இந்த ஆப் தானா..! வெளியான அதிர்ச்சி தகவல்..!

இந்த 2023-ம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடிவடைய போகிறது. வருடத்தின் இறுதி நாட்கள் என்பதால் பல விதமான புள்ளி விவரங்கள் வெளிவர தொடங்கியுள்ளது. அதில் முக்கியமாக தற்போது 2023-ம் ஆண்டில் அதிகம் டெலிட் செய்யப்பட்ட ஆப்களின் புள்ளிவிவரம் வெளிவர தொடங்கியுள்ளது. இந்த தகவலில் ஒரு அதிர்ச்சியான தகவலும் வெளியாகியுள்ளது.

உலகில் சமூக ஊடகங்களை பயன்படுத்தாத மக்களே இல்லை என்னும் அளவுக்கு பெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவராலும் அதிக அளவில் சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக தான் தற்போது சமூக ஊடகங்களை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இது குறித்து சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின் ஒன்றின் படி சுமார் 4.8 பில்லியன் மக்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள் என கூறப்படுகிறது. எனினும் பிரபலமான தளங்கள் மக்களின் ஆதரவை இழந்து வருகின்றன என்றும் கூறப்பட்டது. இது போல் பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

இதையும் படியுங்கள்: Instagram New Update: பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ்..!

அந்த வரிசையில் தான் தற்போது, இந்த 2023-ம் ஆண்டில் அதிகம் டெலிட் செய்யப்பட்ட ஆப்ஸ் (செயலி) குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அமெரிக்காவின் TRG Datacenter வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த பட்டியலின் படி இந்த ஆண்டு அதிகம் டெலிட் செய்யப்பட்ட ஆப்ஸ் பட்டியலில் அதிக மக்கள் பயன்படுத்தும் செயலியான இன்ஸ்டாகிராம் தான் முதலிடத்தில் உள்ளது.

அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராம் கணக்கை எப்படி நீக்குவது என்பது பற்றி ஒவ்வொரு மாதமும் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தேடி உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக 2023-ம் ஆண்டில் அதிகம் டெலிட் செய்யப்பட்ட ஆப்ஸ் பட்டியலில் இன்ஸ்டாகிராம் முதலிடத்தில் உள்ளது.

மேலும் அந்த பட்டியலில் மக்கள் அதிக அளவில் தங்கள் நேரத்தை செலவிடும் செயலிகளான சினாப்சாட் , டெலிகிராம், பேஸ்புக், ட்விட்டர், யூடியூப், வாட்ஸ்அப் போன்ற ஆப்ஸ்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

2023 அதிகம் டெலிட் செய்யப்பட்ட ஆப்களின் பட்டியல்

செயலி எண்ணிக்கை
இன்ஸ்டாகிராம் (Instagram)10,20,000
சினாப்சாட் (Snapchat)1,28,500
டெலிகிராம் (Telegram)71,700
பேஸ்புக் (Facebook)24,900
ட்விட்டர் (Twitter)12,300
யூடியூப் (YouTube)12,500
வாட்ஸ்அப் (WhatsApp)4,950
Most Deleted App
இதையும் படியுங்கள்: ஈஸியா Instagram Account-ஐ நிரந்தரமாக Delete செய்வது எப்படி..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular