Homeலைஃப்ஸ்டைல்பிளாஸ்டிக் அரிசியை சுலபமான முறையில் கண்டறிவது எப்படி?

பிளாஸ்டிக் அரிசியை சுலபமான முறையில் கண்டறிவது எப்படி?

மனிதனின் அடிப்படை தேவைகளில் முதன்மையனது, உணவு தான். அதற்காக தான் நாம் அனைவரும் உழைக்கிறோம். ஆனால் இன்றைய காலத்தில் உணவு பொருட்களில் கலப்படம் அதிகமாகிவிட்டது.

தமிழகத்தில் பாலில் கூட கலப்படம் தான், தமிழகத்தில் ஆவின்பால் தவிர, மற்ற தனியார் பால் அனைத்திலும் கலப்படம் செய்கின்றனர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சில நாட்களுக்கு முன் ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.

தமிழகத்தில் பால் அதிகம் கலப்படம் செய்யப்படுகிறது என்றால், வடமாநிலங்களில் பிளாஸ்டிக் முட்டைகள், பிளாஸ்டிக் சர்க்கரைகள் என தொடங்கிவிட்டனர். ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகக் கருதப்படும் உணவுகளில் முக்கிய பங்கு பால், முட்டைகளுக்கு தான். அனால் தற்போது அதிலும் கலப்படம் செய்யபடுகிறது. இதனை தொடர்ந்து தற்போது அரிசியிலும் Plastic rice என கலப்படத்தை தொடங்கிவிட்டனர்.

கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் அதிகப்படியான பிளாஸ்டிக் அரிசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இதுவே அரிசியில் உள்ள கலப்படத்தை தெளிவாக உணர்த்துகிறது. Plastic rice பற்றிய தொடர் புகார்களை அடுத்து, தமிழகத்தின் பல இடங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இப்பதிவினை படித்த பிறகு உங்களுக்கும் நீங்கள் வாங்கியிருக்கும் அரிசி, பிளாஸ்டிக் அரிசியா என்ற சந்தேகம் வரலாம். அந்த கவலை இனி வேண்டாம். நீங்கள் பயன்படுத்தும் அரிசி பிளாஸ்டிக் அரிசியா என்பதை எளிமையான முறையில் வீட்டில் இருந்தபடியே நாம் அறியலாம்.

How to Find Plastic Rice

பிளாஸ்டிக் அரிசியை கண்டறிவது எப்படி (Tips to Identify the Plastic Rice in Tamil)

Type: 1

  • ஒரு கைப்பிடி அரிசியை எடுத்துக்கொண்டு, அதனை தீக்குச்சி கொண்டு பற்றவையுங்கள். அப்போது பிளாஸ்டிக் வாசனை வந்தால், அது பிளாஸ்டிக் அரிசிதான் என்பதை உறுதிசெய்ய முடியும் .

Type: 2

  • முதலில் நன்றாக அரிசியை வேக வைக்கவும், அதனை ஒரு பாட்டிலில் அடைத்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை யார் கையும் படாதபடி வைக்கவும். 3 நாட்கள் கழித்து பார்க்கும்போது, அந்த அரிசியில் எந்தவித பூஞ்சை தாக்கவில்லை என்றால் அது Plastic rice.

Type: 3

  • சிறிது அரிசியை எடுத்துக் கொண்டு அதன் மீது சூடான எண்ணெயை ஊற்றவும் அப்போது அரிசி உருகினால் அது பிளாஸ்டிக் அரிசிதான்.

Type: 4

  • நாம் சாதாரண தண்ணீரை கொண்டு கூட பிளாஸ்டிக் அரிசியை எளிதாக கண்டறியலாம், அதற்கு ஒரு பாட்டில் நிறைய தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் ஒரு ஸ்பூன் அரிசியை கொட்டுங்கள், பின் சிறிது நேரம் கலக்குங்கள். அப்போது அரிசி தண்ணீரின் மேலே மிதக்கும், அப்படி மிதந்தால் அது Plastic rice.

Type: 5

  • பாத்திரத்தில் கொஞ்சமாக அரிசியை எடுத்து கொதிக்க விடுங்கள். அரிசி கொதிக்கும்போது, பாத்திரத்தில் அடர்த்தியான லேயர் படிந்தால் அது பிளாஸ்டிக் அரிசிதான்.

மேற்கூறிய முறைகளில் பிளாஸ்டிக் அரிசியை சுலபமாக கண்டறியலாம். பிளாஸ்டிக் அரிசியால் புற்றுநோய், பிறப்பு குறைபாடு உள்ளிட்ட பல மோசமான நோய்கள் வரும் வாய்ப்பும் உள்ளது. எனவே ஒவ்வொரு முறை அரிசி வாங்க செல்லும் போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular