Homeசெய்திகள்சபரிமலையிலும் கடைபிடிக்க உள்ள திருப்பதியின் நடைமுறை..! எதற்காக தெரியுமா?

சபரிமலையிலும் கடைபிடிக்க உள்ள திருப்பதியின் நடைமுறை..! எதற்காக தெரியுமா?

சபரிமலையில் வருடாவருடம் பக்தர் கூட்டம் அதிகரிப்பது வழக்கம் தான். ஆனால் கொரனாவிற்கு பிறகு அதிக அளவில் பக்தர்கள் செல்லாமல் இருந்தனர். இந்நிலையில் இந்த வருடம் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்ததை போல இந்த வருடம் பக்தர்கள் கூட்டம் கலைகட்டுகிறது. பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருவதால் அதனை கட்டுபடுத்த அரசு சார்பில் சில நடைமுறைகள் கொண்டுவரப்படவுள்ளன. அவற்றை இப்பதிவில் பார்க்கலாம்.

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இம்மாத தொடக்கத்திலேயே நள் ஒன்றுக்கு 90,000 பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என கேரள அரசு அறிவித்தது. மேலும் பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு தனி தனியான வரிசையும் தொடங்கப்பட்டது, ஆனாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

சபரிமலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் பல விதமான மாற்றங்கள் மற்றும் வழிமுறைகள் ஆகியவற்றை செயல்படுத்தி வருகின்றனர். பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவாக சுவாமி தரிசனம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. எனினும் நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். எனவே திருப்பதியில் கடைபிடிக்கப்படும் முறையை பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த சபரிமலையிலும் அமல்படுத்தலாம் என அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

Sabarimala Q

சபரிமலையில் சுவாமி தரிசனத்திற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருந்து வருகிறது.

பக்தர்கள் கூட்டத்தை கட்டுபடுத்த ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை 90,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. சபரிமலையை சுற்றி 12 மையங்கள் அமைக்கப்பட்டு, இந்த மையங்கள் மூலம் உடனடியாக முன்பதிவு செய்து வரும் பக்தர்களால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. எனவே நேரடி ஆன்லைன் முன்பதிவு முறையை நிறுத்தி விடலாமா என்றும் ஆலோசனை நடைபெற்றுவருகிறது.

இதனை கட்டுபடுத்த திருப்பதியில் கடைபிடிக்கப்படும் கட்டண அடிப்படையிலான சிறப்பு தரிசனம் வழங்கலாம் என்றால் அது நடைமுறைக்கு சரியாக இருக்காது என கருதப்படுகிறது. ஏற்கனவே போக்குவரத்து துறை அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன. எனவே இதற்கு மாற்று வழியாக திருப்பதியில் கடைப்பிடிக்கப்படும் வரிசை முறையை பின்பற்றலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்தி, பக்தர்கள் சிரமமின்றியும் எந்த விதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் சுவாமி தரிசனம் செய்ய சில வழிமுறைகளை அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அங்கு 10 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கியூ காம்ப்ளக்ஸ் கட்டப்பட்டுள்ளது.

Tirupati Queue

இந்த நடவடிக்கையில் முதற்கட்டமாக புதிதாக கட்டப்பட்டுள்ள கியூ காம்ப்ளக்ஸை உபயோகப்படுத்த முடிவு செய்யப்பட்டள்ளது. இதன் மூலம் பக்தர்கள் மரக்கூடத்தில் இருந்து சரங்குத்தி வழியாக சன்னிதானத்திற்கு அனுப்படுகின்றனர்.

நடை பந்தலில் இருக்கும் கூட்டத்தை பொறுத்து ஒவ்வொரு கியூ காம்ப்ளக்சில் இருந்தும் பக்தர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றவாரு அனுப்படுகின்றனர். இந்த முறை சிறப்பாகவும் கூட்ட நெரிசல் இல்லாமலும் இருந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர். ஆனால் இந்த புதிய கியூ காம்ப்ளக்ஸில் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பக்தர்கள் கேட்டுகொண்டுள்ளனர்.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மூணான குழியை என்னும் பகுதியை சேர்ந்த 100 வயதான மூதாட்டி பாருக்குட்டி அம்மா அவர்கள் இருமுடி கட்டி பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு மலைப்பாதையில் நடந்து வந்து ஐயப்பனை தரிசித்தார். அப்போது அவருடைய பேரன் பேத்திகள் உடனிருந்தனர்.

Ayyan App: சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் மொபைல் செயலி
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular