Homeவேலைவாய்ப்பு செய்திகள்டிகிரி முடித்தவரா நீங்கள்? மாதம் ரூ. 1,00,000/- சம்பளத்துடன் வங்கியில் பணிபுரிய அரிய வாய்ப்பு..!

டிகிரி முடித்தவரா நீங்கள்? மாதம் ரூ. 1,00,000/- சம்பளத்துடன் வங்கியில் பணிபுரிய அரிய வாய்ப்பு..!

TMB Recruitment 2024: டிகிரி முடித்துவிட்டு வங்கியில் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்காக தற்போது தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் வேலைவாய்ப்பு பற்றி அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பலரும் அரசுவேலைக்கு படித்து வரும் நிலையில், அதற்கான வகுப்புகளில் சேர்ந்து பயிற்சிகள் எடுத்து வருகின்றனர்.

இதனால் அரசுவேலைக்கு போட்டியிடுவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் வங்கி வேலைக்கு செல்வதற்காகவே பலரும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்கில் (Bank job 2024 in Tamilnadu) வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tamilnad Mercantile Bank Limited ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதன் படி தலைமை நிர்வாக அதிகாரி உள்ளிட்ட இரண்டு விதமாக பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே நாம் இப்பதிவில் இந்த அறிவிப்பு மூலம் நிரப்பப்படவுள்ள பதவிகளுக்கான கல்வித் தகுதி விவரங்கள், தேவையான வயது வரம்பு, தேர்வு முறை, கட்டண விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி விருப்பமும், ஆர்வமும் உடையவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

Tamilnad Mercantile Bank vacancy 2024 – விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 25 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது வரம்பு 45 முதல் அதிகப்பட்டச வயது வரம்பு 62 வரை இருக்கலாம். இந்த TMB Recruitment 2024 in Tamil அறிவிப்பின் படி விண்ணப்பதாரர்கள் எழுத்துதேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் தூத்துக்குடியில் பணி அமர்த்தப்படுவார்கள்.

TMB அதிகார்ப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்ட அறிவிப்பின்படி விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே வரவேற்கப்படுகிறது. அதாவது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க www.tmbnet.in என்ற அதிகாரப்பூர் இணைதளத்தில் வெளியாகியுள்ள tmbnet.in/tmb careers என்ற லிங்க் மூலமாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

TMB Recruitment 2024 அறிவிப்பின் படி Chief Executive Officer உள்ளிட்ட இரண்டு விதமான பதவிக்கு விண்ணப்பிக்க 19.04.2024 முதல் 05.05.2024 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தகவல் கூறப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான ஊதியம் ரூ. 1,00,000 முதல் ரூ. 2,00,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடங்களுக்கு இரண்டு காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளது.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் 2024 அறிவிப்பின் படி இந்த பதவிக்கு (Bank Velai Vaippu 2024) விண்ணப்பிப்பதற்கு எவ்வித கட்டணமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு குறித்த முழு தவல்களை தெரிந்துக்கொள்வதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

டிகிரி முடித்தவரா நீங்கள்? மாதம் ரூ. 1,00,000/- சம்பளத்துடன் வங்கியில் பணிபுரிய அரிய வாய்ப்பு..!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Salary: 10000-20000

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-22

Posting Expiry Date: 2024-05-05

Employment Type : FULL_TIME

Hiring Organization : Tamilnad Mercantile Bank

Organization URL: www.tmbnet.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, V.E.Road, Thoothukudi, Tamil Nadu, 628002, India

Education Required:

  • Bachelor Degree

Experience Required: 240 Months

இதையும் படியுங்கள்: 10 வது முடித்தவர்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை செய்ய அரிய வாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular