Homeசெய்திகள்அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்..! முதலவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்..! முதலவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

தமிழக பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக 20 சதவீதம் வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் சுமார் 2,83,787 Pothu Thurai Ooliyarkaluku Bonus கிடைக்கும்.

தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 42 சதவீதம் அகவிலைப்படியை 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அக்டோபர் 25 உத்தரவிட்டார். இதனை அடுத்து சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் தீபாவளி பண்டிகை போனஸ் 20 சதவீதம் போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி போக்குவரத்து துறை செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில் போக்குவரத்து ஊழியர்களுக்கு போனஸ் வழங்காவிடில் அக்டோபர் 30, 31 மற்றும் நவம்பர் 1 ஆம் தேதிகளில் 12 மணி நேர காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் C மற்றும் D பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 சதவீதம் வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

Bonus for State Government Public Sector Employees

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமிக்க மாநிலமாக தமிழ் நாட்டை நிலை நிறுத்துவதில் தொழிலாளர்களின் உழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறார்கள். எனவே, தமிழ்நாடு அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில், 2021-23 ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கிட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

திருத்தப்பட்ட மிகை ஊதிய சட்டம் 2015 இந்த படி, மிகை ஊதியம் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூபாய் 21,000 என உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி மிகை ஊதியம் கணக்கிட இருந்த மாதாந்திர உச்சவரம்பு ரூபாய் 7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 2022-23 ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையினை கீழ்க்கண்டடவாறு வழங்கப்படும்.

  • இலாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கப்படப்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
  • தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுைடய தொழிலாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
  • நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச மிகை ஊதியம் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 10 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
  • தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் தகுதியுைடய C மற்றும் D பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை வழங்கப்படும்.
  • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய C மற்றும் D பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் வழங்கப்படும்.
  • இது தவிர தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000/- ரூபாயும் கருணைத் தொகை வழங்கப்படும்.

இதனால் மிகை ஊதியம் பெற தகுதியுள்ள தொழிலாளர்கள் குறைந்த பட்சம 8,400 ரூபாயும் அதிகபட்சம் 16,800 ரூபாயும் பெறுவர். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 83 ஆயிரத்து 787 தொழிலாளர்களுக்கு 402 கோடியே 97 லட்சம் ரூபாய் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும் இது தவிர பல்வேற கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணைகள் தனியே வெளியிடப்படும்.

தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் வரும் விழாக்காலங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular