Homeசெய்திகள்தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!

தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!

தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 42 சதவீதம் அகவிலைப்படி (Dearness Allowance) ஆனது 46 சதவீதமாக உயர்த்தி 01.07.2023 முதல் வழங்கப்படும் என மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன் அடைவார்கள்.

தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பு

மக்களின் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் அரும்பணியில். அரசோடு இணைந்து பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது.

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் போரிக்கையை தமிழக முதலமைச்சர் கனிவுடன் பரிசீலித்து, ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதை பின்பற்றி வெயல்படுத்தப்படும் என்று ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது 42% உள்ள Aakavilaipadi -ஐ 01.07.2023 முதல் 46% உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் படி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் உட்பட சுமார் 16 இலட்சம் பேர் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 2546.16 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular