Homeசெய்திகள்சென்னையில் கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி… தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னையில் கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி… தமிழக அரசு அறிவிப்பு..!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி – 2023 (Chennai Grandmaster Masters 2023) சென்னை லீலா பேலஸில் டிசம்பர் மாதம் வரும் 15 முதல் 21-ம் தேதி வரை நடைபெறும் (Chess Championship 2023 Tournament in Chennai) என அறிவித்துள்ளது.

இந்தப் போட்டியில் 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொண்டு 7 ரவுண்ட் – ராபின் சுற்றுகள் கிளாசிக் செஸ் வகையில் விளையாடுவார்கள். இப்போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.50 லட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படவுள்ளது.

Chess Championship 2023 Tournament in Chennai

இந்தியாவின் தலைசிறந்த செஸ் கிராண்ட்மாஸ்டர்களான டி.குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகைசி போன்ற வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்வதன் மூலம் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதிபெற வாய்ப்பாக அமையும். மேலும் சர்வதேச கிராண்ட்மாஸ்டர்கள் பர்ஹாம் மக்சூட்லூ, பி. ஹரிகிருஷ்ணா, லெவோன் அரேனியன், பாவெல் எல்ஜனோவ், அலெக்ஸாண்டர் ப்ரெட் கே மற்றும் ஸ்ஜூகிரோவ் சளனான் போன்ற வீரரர்களும் பங்கேற்க உள்ளனர்.

செஸ் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்தியது. தற்போது இந்தியாவில் உள்ள கிராண்ட்மாஸ்டர்களில் மூன்றில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி, பிரக்ஞானந்தா, டி.குகேஷ் மற்றும் சமீபத்திய கிராண்ட்மாஸ்டர் வைஷாலி போன்ற வீரர்களுடன் தொடர்கிறது.

மேலும் படிக்க: Grand Master பட்டம் வென்ற முதல் தமிழ் பெண் வைஷாலி
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular