Homeசெய்திகள்75-வது குடியரசு தின விழாவில்..! தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு அனுமதி..!

75-வது குடியரசு தின விழாவில்..! தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு அனுமதி..!

நாட்டின் 75 வது குடியரசு தின விழா (75th Republic Day in Tamil) வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கொடியேற்ற உள்ளார். குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக 75th Republic Day Chief guest பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்துக்கொள்ள உள்ளார்.

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பல மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். இந்த குடியரசு தின விழா (75 kudiyarasu thina vizha) நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை மத்திய அரசு கடந்த 2 மாதங்களாக செய்து வருகிறது. மற்ற தலைவர்கள் அமருமிடம், பார்வையார்கள் இடம் என அனைத்தும் ஏற்பாடு செய்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி குடியரசு தின விழாவில் பங்கேற்க உள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு அலங்கார ஊர்தியில் உத்திரமேரூர் கல்வெட்டு காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் மகளிர் உரிமை திட்டம், நான் முதல்வர் திட்டம், மகளிர் இலவச பேருந்து திட்டம், மனுநீதிச் சோழன் குறித்த ஊர்வலம் மற்றும் குடவோலை முறை போன்றவற்றை காட்சிப்படுத்தப்பட உள்ளது.

75th Republic Day in Tamil

இந்நிலையில் நடப்பாண்டு பஞ்சாப், டெல்லி குடியரசு தின விழா அலங்கார ஊர்திக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் அந்த மாநில அரசுகள் கடும் விமர்சனங்களை செய்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு அனுமதி கொடுக்கவில்லை. எனினும் தமிழக அரசு அந்த அணிவகுப்பை TN decorative vehicle சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் அலங்கார ஊர்தி அணிவகுப்பை நிகழ்த்தியது. தற்போது தமிழக அரசுக்கு அனுமதி கொடுத்திருப்பதால் அதனை சிறப்பாக செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது.

மேலும் படிக்க: 75 வது குடியரசு தின விழா: சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இந்தியா வருகை
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular