Homeசெய்திகள்தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்த குட் நியூஸ்… மகிழ்ச்சியில் அரசு பள்ளி ஆசிரியர்கள்..!

தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்த குட் நியூஸ்… மகிழ்ச்சியில் அரசு பள்ளி ஆசிரியர்கள்..!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் (Govt School Teachers) தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி ஆசிரியர்களின் வேலை சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களும் (Elementary School Teachers) தற்போது மாணவர்கள் சார்ந்த மற்றும் அலுவல் சார்ந்த பல பேப்பர் ஒர்க் தான் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்ப்பின் போது அதிகப்படியான வேலை அவர்களுக்கு இருக்கும்.

இந்த பேப்பர் ஒர்க் காரணமாக மாணவர்கள் சம்பந்தமான தகவல்கள் உள்ள பல ஆவணங்களை அவர்கள் சேகரிக்க வேண்டும். அவற்றில் சில ஆவணங்கள் தவறவிடவும் அல்லது சேதமாகவும் வாய்ப்புகள் உள்ளது. எனவே இந்த பிரச்சனைகளை தடுக்கவும், ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைப்பதற்காகவும் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

வரும் கல்வியாண்டு முதல் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் அனைத்து விதமான ஆவணங்கள் மற்றும் செயல்பாடுகளை ஆன்லைனில் மூலமாக மேற்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்காக அனைத்து அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு டேப்லெட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Govt Announcement

தற்போது அரசு பள்ளி ஆசிரியர்கள் மக்களவை தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த பணிகள் முடிந்த பிறகு முதல்கட்டமாக 79,723 டேப்லெட்கள் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர்களுக்கு முறைப்படி பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்படும் எனவும் தமிழக பள்ளி கல்வித்துறை (TN Govt Announcement) அறிவித்துள்ளது.

மேலும் படிக்க: தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..! கோடை விடுமுறை எத்தனை மாதம் தெரியுமா?
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular