Homeசெய்திகள்மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பள்ளிக்கல்வித்துறை…

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பள்ளிக்கல்வித்துறை…

நடப்பாண்டிற்கான பாடங்கள் அனைத்தும் முடிந்து பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில தினங்களில் மாணவர்களுக்கு தேர்வு முடிந்து பள்ளிகில் கோடை விடுமுறை விடபோகிறார்கள். இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை (Tamil Nadu School Education Department) ஒரு புதிய அறிவிப்பை வெறியிட்டுள்ளது.

மக்களவை தேர்தல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் தொடர்ச்சியாக நடைபெறாமல் சற்று இடைவெளி விட்டு நடைபெற்று வருகறிது. இந்த வாரத்துடன் பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் முடிவடைகின்றன. இதற்கு முன்பே பொதுத்தேர்வு எழுதும் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து விட்டன.

அடுத்த ஆண்டு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அதாவது 9 வது மற்றும் 11 வது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறும். இந்த சிறப்பு வகுப்புகளால் மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவார்கள் என புகார் பள்ளிக்கல்வித்துறைக்கு வந்ததால். பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவின்படி இந்த கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் (Special Class for Students) நடத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu School Education Department

சில தனியார் பள்ளிகளில் ஒன்பாதாம் மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டுக்கான பாடங்களை கோடை விடுமுறை நாட்களில் நடத்தி வரும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை இந்த உத்தரவினை அறிவித்துள்ளது. இதனை மீறி பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

மேலும் படிக்க: திருவண்ணாமலை கிரிவலம்..! சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular