Homeசெய்திகள்தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு Good News..!

தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு Good News..!

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 12 ஆம் தேதி கொண்டாட உள்ளதை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளும் வரும் நவம்பர் 5 ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசின் உணவுத்துறை சார்பில் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அனைத்து நுகர்வு பொருட்களையும் ஒரே தவணையில் வழங்கபட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் பொதுமக்களுக்கு இலவச பொருட்கள் வழங்கப்படும். பொதுவாக மாநில அரசு சார்பாக பொது விநியோகம் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் சக்கரை, பருப்பு, எண்ணெய் ஆகியவை மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பருப்பு ரூ.30க்கும், ஒரு கிலோ சக்கரை ரூ.13க்கும், ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் விற்கப்படுகிறது.

ஞாயிற்றுக் கிழமையில் ரேஷன் கடை

Ration Things in Tamil Nadu

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12ஆம் தேதி கொண்டாட உள்ளதை முன்னிட்டு தமிழகத்தில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வழங்கப்பட உள்ள பருப்பு, சக்கரை மற்றும் எண்ணெய் ஆகியவற்றை இலவசமாக வழங்குவதை குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் சிரமமின்றி அனைத்து பொருட்களும் வாங்குவதற்காக ஞாயிற்றுக்கிழமையில் ரேஷன் கடை வழக்கமாக செயல்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. பண்டிகை காலங்களில் ரேஷன் கடை ஊழியர்கள் பொருட்களை வெளியில் விற்றுவிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் அவ்வப்போது வருவதால் அதை கட்டுப்படுத்த கிடங்குகளில் பொருட்களை ஏற்றும்போதும் அதனை ரேஷன் கடைகளில் இறக்கும் போதும் புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் ரேஷன் பொருட்கள் கடத்துவது தவிர்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு தட்டுபாடின்றி நுகர்வு பொருட்கள் கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular