Homeசெய்திகள்போக்குவரத்து ஊழியர்கள் திடீர் போராட்டம்..! பாதிக்கப்படும் மக்கள்..!

போக்குவரத்து ஊழியர்கள் திடீர் போராட்டம்..! பாதிக்கப்படும் மக்கள்..!

போக்குவரத்து ஊழியர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை போனஸ் 20 சதவீதம் வழங்குமாறு வலியுறுத்தி மூன்று நாட்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் போனஸ் குறித்த தகவல் எதுவும் தமிழக அரசால் வெளியிடப்படவில்லை.

நேற்று (அக்.25) அரசு ஊழியர்களுக்கு 4 தசவீதம் அகவிலைப்படி உயர்வு என தமிழக முதலமைச்சர் அறிவித்தார். இந்நிலையில் சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் தீபாவளி பண்டிகை போனஸ் 20 சதவீதம் போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி போக்குவரத்து துறை செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். போனஸ் வழங்காவிடில் அக்டோபர் 30, 31 மற்றும் நவம்பர் 1 ஆம் தேதிகளில் 12 மணி நேர காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் போனஸ் சதவீதம்

2004 ஆம் ஆண்டு முதல் போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் போனஸாக 20 சதவீதம் வழங்கப்பட்டு வந்தது, கொரோனா பொது முடக்கம் காரணமாக 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் போனஸ் 10 சதவீதம் வழங்கப்பட்டது. அப்போது இருந்த சூழல் காரணமாக போக்குவரத்து ஊழியர்கள் அதை பெற்றுக்கொண்டனர். அதிபோல் 2022 ஆம் ஆண்டும் 10 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டது இதனால் தமிழக அரசு மீது Pokkuvarathu Uliyargal அதிருப்தி அடைந்தனர்.

தீபாவளி பண்டிகை வர இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இன்னும் தமிழக அரசால் போனஸ் வழங்குவது குறித்த தகவல் எதுவும் அறிவிக்கவில்லை. கடந்த முன்று ஆண்டுகள் போல 10 சதவீதம் போனஸ் தொகை வழங்கவே அதிக வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. இதன் காரணமாக மூன்று நாட்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக போக்குவரத்து ஊழியர்கள் கூறுகின்றனர். இதனால் சுமார் 1500 பேருந்துகள் வரை இயங்காது என கருதப்படுகிறது. போக்குவரத்து ஊழியர்களின் இந்த போராட்டத்தினால் பெருமளவு பாதிக்கப்படுபவர்கள் பயணிகள் தான்.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular