Homeசெய்திகள்Andhra Train Accident: ஆந்திராவில் ரயில் விபத்து...இரு ரயில்கள் எதிரெதிரே மோதல்

Andhra Train Accident: ஆந்திராவில் ரயில் விபத்து…இரு ரயில்கள் எதிரெதிரே மோதல்

ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயநகரம் மாவட்டத்தில் நேற்று இரவு இரு பயணிகள் ரயில்கள் எதிரெதிரே மோதிக்கொண்டு பெரும் விபத்தை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பரப்பரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

விஜயநகரத்திலுருந்து ஒடிசா மாநிலத்தில் உள்ள ராய்கடா என்ற இடத்திற்கு இயக்கப்பட்ட ரயில் பிரேக்கில் ஏற்ப்பட்ட கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் ஆந்திரா மாநிலத்தில் உள்ள பலாசா என்ற இடத்திற்கு விசாகப்பட்டினத்திலுருந்து சென்றுக்கொண்டிருந்த ரயில் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டது.

இந்த கோர விபத்தில் இதுவரை 19 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 54 பேர் காயமடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்தவர்களில் 7 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டள்ளது, மற்றும் காயமடைந்தவர்களில் 39 பேர் விஜயநகரம் மருத்துவமனையிலும் மற்றவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக விஜயநகரம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் மாவட்ட அதிகாரிக்கும் அரசின் உயர் அதிகாரிகளுக்கும் மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறும், அவசர சிகிச்சைக்கு தேவையானப் பொருட்களை உடனடியாக ஏற்பாடு செய்திடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

Train Accident Today

ஆந்திர மாநில அரசின் சார்பில் அம்மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுப்பற்றி அவர் கூறுகையில் விபத்தில் பலியான ஆந்திராவை சேர்ந்தவர்களுக்கு ரூபாய் 10 லட்சமும், பிற மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு ரூபாய் 2 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மத்திய ரயில்வே அமைச்சகம் சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் தனது எக்ஸ் பக்கத்தில், ‛காயமடைந்த அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூபாய் 50 ஆயிரமும் வழங்கப்படும்’ என கூறியுள்ளார். இதேபோல் மத்திய அரசு சார்பிலும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து பிரதமர் மோடி அவர்கள் தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தோருக்கு ரூபாய் 50 ஆயிரமும் வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

விசாகப்பட்டினத்திலுருந்து வந்த ரயில் சிக்னலை கவனிக்காமல் சென்றதால் தான் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த ரயில் விபத்துக் காரணமாக அந்த வழியில் 15 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன, மற்றும் 22 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular