Homeசெய்திகள்TTF Vasan: யார் தடுத்தாலும் நான் பைக் ஓட்டுவேன்..!

TTF Vasan: யார் தடுத்தாலும் நான் பைக் ஓட்டுவேன்..!

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் சிறிது நாட்களுக்கு முன் சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டி கீழே விழுந்து காவல்துறையால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

அவரை பார்த்து பல இளம் தலைமுறையினர் கெட்டுப்போவதால் அவருடைய யூடியூப் சேனலை முடக்குமாறும், அவரது பைக்கை எரிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுமட்டுமல்லாமல் அவருடைய License 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன் புழல் சிறையில் இருந்து வெளிவந்த டிடிஎப் வாசன், “எதற்கும் கலங்காத நான் என்னுடைய லைசென்ஸ்சை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்துவிட்டார்கள் என்று கூறியவுடன் கண் கலங்கிவிட்டேன்” என்று கூறினார்.

TTF Vasan

ஆனால் தன்னால் பைக் ஓட்டாமல் இருக்க முடியாது என்றும் தன்னிடம் “சர்வதேச லைசென்ஸ்” இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவரது சர்வதேச லைசென்ஸ்யும் முடக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டிடிஎப் வாசனை பல முறை ஜாமினில் எடுக்க முயற்சித்த போதும் நீதிபதிகள் அவரது ஜாமீன் மனுக்களை நிராகரித்து புழல் சிறையில் 40 நாட்களுக்கும் மேலாக அடைத்து வைத்தனர். இந்நிலையில் தான் சிறையில் இருந்து வந்தவரிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினார்கள்.

சிறை அனுபவம் பற்றி கூறிய TTF Vasan, சிறையில் அவர் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், ஒரு கை உடைந்த நிலையில் தான் மிகவும் சிரமப்பட்டேன் என்றும், ஆனால் சிறையில் அவருக்கு தெரிந்த சிறைவாசிகள் நிறைய பேர் இருந்ததால் தனக்கு அவர்கள் உதவி செய்தாக அவர் கூறினார்.

பிறகு அவரிடம் லைசென்ஸ் குறித்து கேள்வி எழுப்பியதற்கு, அவர் பைக் தான் என் வாழ்க்கையே, அதற்காக என் வாழ்க்கையே நான் அர்ப்பணித்துள்ளேன். ஆனால் 10 ஆண்டுகளுக்கு சைசென்ஸ் ரத்து செய்வது என் வாழ்க்கையே முற்றிலும் அழிக்க செய்ததுபோல் உள்ளதாகவும் அவர் கூறினார். நான் பைக் ஓட்டுவேன், படம் நடிப்பேன், என்று கூறிய அவர் என்னுடைய Passion-ஐ எல்லாம் விட்டு தரமுடியாது என்று கூறினார்.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular