Homeசினிமாகில்லி படத்தில் விஜய்க்கு பதிலாக நடிக்க இருந்த ஹீரோ யார் தெரியுமா?

கில்லி படத்தில் விஜய்க்கு பதிலாக நடிக்க இருந்த ஹீரோ யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் 2004-ம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் கில்லி. இந்த படம் நடிகர் விஜய் அவர்களுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படம் மக்கள் மத்தியில் பெரும வரவேற்பை பெற்றது.

இந்த படமானது தெலுங்கில் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஒக்கடு என்ற திரைப்படத்தின் ரீமேக் படம் ஆகும். எனினும் இந்த படம் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றிப்படமாக மாறியது. இந்த படத்தில் விஜய் கமிட் ஆகும் போது இந்த படம் ரீமேக் என பலரும் கூறியுள்ளனர் எனினும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் விஜய் இப்படத்தில் நடித்துள்ளார். அதற்கு ஏற்றார்போல் இந்த படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இந்நிலையில் தற்போது ஒரு முக்கியமான தகவல் (Ghilli Movie Latest News) வெளியாகியுள்ளது. இதன் படி இந்த படத்தில் முதலில் கதாநாயகன் கதாபாத்திரத்தில் (Ghilli Movie Hero) விஜய்க்கு பதிலாக மற்றொரு பிரபல நடிகர் தான் நடிக்க இருந்தாராம். ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்கமுடியாமல் போக இப்படத்தில் அதன்பிறகு விஜய் நடித்தாராம்.

இந்த படத்தை (Ghilli Movie Director) இயக்குனர் தரணி தான் இயக்கி இருந்தார். இவர் கடந்த 1999-ம் ஆண்டு எதிரும் புதிரும் என்கிற படத்தினை இயக்கினார் இந்த படம் இவருக்கு வெற்றிப்படமாக அமையவில்லை. ஆனால் இப்படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரமை வைத்து தில், தூள் என வரிசையாக இரண்டு மாஸ் ஹிட் படங்களை கொடுத்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தான் இவர் கில்லி படத்தை இயக்கினார்.

Actor Vikram

இந்நிலையில் தான் இவர் முதலில் இந்த கில்லி படத்தில் நடிகர் விக்ரமை தான் நடிக்கவைக்க வேண்டும் என்று நினைத்துள்ளார் ஆனால் அவர் அப்போது வேறொரு படத்தில் பிஸியாக இருந்த காரணத்தால் இந்த படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. அதன் பிறகு தான் அவர் இந்த கதாபாத்திரத்திற்கு விஜய் பொருந்துவார் என்று அவரை நடிக்கவைக்க முடிவு செய்துள்ளனர். இவர் நடிப்பில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அவருக்கும் அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்: CWC Pugazh: ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது படம் பற்றிய தகவல் வெளியானது..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular