Homeசினிமாவாரிசு நடிகருடன் இணையும் அனுஷ்கா..! படம் குறித்த அறிவிப்பு வெளியானது..!

வாரிசு நடிகருடன் இணையும் அனுஷ்கா..! படம் குறித்த அறிவிப்பு வெளியானது..!

தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை அனுஷ்கா. இவர் தமிழ் மொழியில் ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். மேலும் இவர் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்னர் வெளியான பாகுபலி படமும் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் அனைவருக்கும் பிடித்து இருந்தது.

இந்நிலையில் தான் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை கூட்டினார். இந்த படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தாலும் இந்த படத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க மிகவும் சிரமப்பட்டார். இதன் காரணமாக இவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்தது. இந்த நிலையில் சில வருடங்கள் இடைவெளிக்கு பிறகு கடந்த 2023-ம் ஆண்டு வெளியான மிஸ் சிட்டி மிஸ்டர் பாெலிசிட்டி என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அனுஷ்கா (Actress Anushka Shetty) மலையாளத்தில் ஜெயசூர்யா நடிப்பில் உருவாகி வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இந்த படம் 90 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதுவரை தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் மட்டும் நடித்து வந்த அனுஷ்கா தற்போது இப்படம் மூலம் மலையாளத்தில் நடிக்கவுள்ளார்.

Actress Anushka Next Movie Hero

இந்த நிலையில் தான் தற்போது நடிகை அனுஷ்கா இயக்குநர் கிரிஷ் இயக்கும் காதி என்னும் படத்தில் (Actress Anushka Next Movie) நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் (Actress Anushka Next Movie Hero) நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த காதி படத்தை ஃபர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மெண்ட் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தின் ஒடிடி உரிமையை அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளது.

இதையும் படியுங்கள்: பாலிவுட் நடிகையுடன் புதிய படத்தில் இணையும் யாஷ்..! படம் எப்படி இருக்கும்?
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular