Homeலைஃப்ஸ்டைல்Walking Benefits in Tamil: உங்கள் வாழ்க்கையை மாற்றும் வாக்கிங்..!

Walking Benefits in Tamil: உங்கள் வாழ்க்கையை மாற்றும் வாக்கிங்..!

Walking Benefits in Tamil: தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் இந்த காலங்களில் உடல் உழைப்பு என்பது இல்லாமல் போய்விட்டது என்றே கூறலாம். தற்போது எல்லா வேலைகளுக்கும் புதிதுபுதிதாக இயந்திரங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுவிட்டது. அதனால் மனிதர்கள் செய்யும் வேலைகளை இன்று இயந்திரங்கள் செய்துவிடுகின்றன. இதனால் மனிதர்களுக்கு உடல் உழைப்பு என்பது ஒன்று இல்லாமல் போய்விட்டது.

நேரத்தை மிச்சப்படுத்தவும், வேலையும் எளிமையாக முடியும் என்பதற்காக கண்டுப்பிடிக்கப்பட்ட தொழில்நுட்பங்களினால் இன்று மக்கள் தங்களின் அன்றாட வேலைகளை செய்வதற்கு கூட சிரமப்படுகிறார்கள். தொழில்நுட்பங்கள் கண்டுப்பிடிக்கப்படாத காலங்களில் மக்கள் அவர்களின் வேலைகளையும், மற்ற வேலைகளையும் செய்ய தங்கள் உடல் உழைப்பை மட்டும் தான் பயன்படுத்தினார்கள். இதனால் அவர்கள் நூறு வயதையும் தாண்டி ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.

தற்போதைய நிலையில் அனைத்து வேலைகளும் கம்ப்யூட்டரில் செய்துக்கொண்டிருப்பதால், உடல் உழைப்புக்கு வேலை இல்லாமல் போய்விட்டது என்றே கூறலாம். இதனால் தினந்தோறும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது நம் உடலுக்கு வேலை கொடுக்க வேண்டும். நாம் இந்த பதிவில் நடைப்பயிற்சி செய்வதால் என்ன பயன்கள் என்று பார்க்கலாம்.

நடைப்பயிற்சி உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Walking Benefits: நடைப்பயிற்சி பயன்கள்

Walking Benefits

ஒரு சிலர் நடைப்பயிற்சி 40 அல்லது 50 வயதிற்கு மேல் தான் செல்ல வேண்டும் இப்போது எதற்கு என்று நினைக்கிறார்கள். ஆனால் நடைப்பயிற்சி செய்ய வயது ஒரு தடை இல்லை. நம் உடலை சுறுசுறுப்பாக வைத்தக்கொள்வதற்கு நடைப்பயிற்சி அவசியமாகும்.

  • காலையில் உடற்பயிற்சி செய்வதால் அன்றைய நாள் நமக்கு சுறுசுறுப்பாகவும், புத்துணர்வாகவும் இருக்கும்.
  • கடினமான உடற்பயிற்சிகளை செய்யாமல் இதுபோன்ற எளிய நடைப்பயிற்சியை குறைந்தது 30 நிமிடங்கள் செய்தால் உங்கள் மனதும், உடலும் சுறுசுறுப்பாக இருக்கும்.
  • காலையில் வேகமாக நடந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து உங்கள் உடல் சுறுசுறுப்பாகவும், எடை அதிகரிப்பதையும் குறைக்கும்.
  • நீரிழிவு நோய் உள்ளவர்கள் காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
  • நடைப்பயிற்சி மேற்கொள்வதால் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. இதனால் நாம் எடுத்துக்கொள்ளும் உணவு எளிதில் ஜீரணமாகிவிடுகிறது.
  • காலையில் இதுபோன்று சிறிது நேரம் வாக்கிங் செய்வதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து நம்மை சுறுசுறுப்படைய செய்கிறது.
  • அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் சற்று வெளியில் நடைப்பயிற்சி மேற்கொண்டு வந்தால் மனதிற்கு ஒரு அமைதி கிடைக்கும்.
  • மனச்சோர்வு உள்ளவர்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டால் மனக்குழப்பத்தில் இருந்து சிறிது சிறிதாக விடுபடலாம் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க: சமையல் உப்பு ஈரப்பதம் இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? Tips for Keeping Salt Dry in Tamil

FAQS

1. நடைபயிற்சி எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்? How effective is walking?

உடற்பயிற்சி மேற்கொண்டால் நமது உடல் சுறுசுறுப்பாக இருக்கும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

2. நடைபயிற்சி என்ன வகையான உடற்பயிற்சி? What type of exercise is walking?

இது இரத்த ஒட்டத்தை அதிகரிக்க கூடிய ஒருவகையான உடற்பயிற்சி.

3. நடப்பது ஒரு ஆற்றலா? Is walking an energy?

நடைபயிற்சி உங்களுக்கு அதிக ஆற்றலைத் தரும். உங்கள் உடலை நகர்த்துவது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular