Homeதொழில்நுட்பம்UPI பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! இத செயலைனா உங்க UPI ID Block தான்..!

UPI பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! இத செயலைனா உங்க UPI ID Block தான்..!

இந்த காலகட்டத்தில் அனைத்தும் நவீன மயமாகிவிட்டது. இக்காலத்தில் நம்மில் பலர் வீட்டு வாடகை முதல் EB Bill, Gas Bill போன்ற அனைத்தையும் ஆன்லைன் மூலமே அதிக அளவில் செலுத்திவிடுகிறோம். நாம் பல வகையான Online Payment செயலிகளை பயன்படுத்துகிறோம். அவற்றில் அதிக அளவில் பயன்படுத்தும் செயலி என்றால் அது UPI தான்.

தற்போது உள்ள சூழலில் நம் நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையின் வளர்ச்சி அதிகரித்துள்ளது, எந்த அளவுக்கு என்றால் பெரிய கடைகள் தொடங்கி சாலையோர கடைகளில் கூட QR மூலம் பேமெண்ட் செய்யும் வசதி உள்ளது.

அதிலும் குறிப்பாக பேமெண்ட் செய்ய Gpay, Phonepe, Paytm போன்ற யு.பி.ஐ. செயலிகளே அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் செயலற்று இருக்கும் UPI ஐடிகளை 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் முடக்கவுள்ளதாக இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: UPI: ரூ.2000 க்கு மேல் இனி அனுப்ப முடியாது..!

இந்த அறிவிப்பில் UPI App-ல் வங்கி கணக்கை இணைத்து ஒரு வருடத்திற்கும் மேலாக எந்த வித பணபரிவர்த்தனையும் செய்யாமல் இருக்கும் யு.பி.ஐ. ID-கள் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் செயலிழந்துவிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த காலக்கெடு முடிய 10 நாட்கள் மட்டுமே மீதம் உள்ளது. எனவே ஒருவருட காலமாக பயன்படுத்தாத ID-களில் உடனடியாக பரிவர்த்தனை செய்து ID முடக்கப்படுவதைத் தவிர்க்கவும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

UPI ID Block
இதையும் படியுங்கள்: UPI Pay: பட்டன் போன் மூலம் பண பரிவர்த்தனை செய்யலாம்…!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular