Homeசெய்திகள்WhatsApp Warning... இந்தியாவை விட்டு வெளியேற போகிறதா வாட்ஸ்அப்..!

WhatsApp Warning… இந்தியாவை விட்டு வெளியேற போகிறதா வாட்ஸ்அப்..!

உலகளவில் அதிக பல செய்தி பரிமாற்று செயலிகள் இருந்தாலும் அதிக அளவிலான பயனர்களால் பயன்படுத்தப்படும் ஒரு செய்தி பரிமாற்ற செயலி தான் வாட்ஸ்அப். இந்த செயலியின் மூலமாக மக்கள் ஆடியோ கால், வீடியோ கால், இணைய வாயிலாக குரூப்கள் மூலம் செய்திகள், புகைப்படங்கள் உள்ளிட்ட பல தகவல்களை பரிமாறிக்கொள்ளகின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். இதற்கு காரணம் இந்த செயலி பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக இருப்பதும் நம்முடைய தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதும் தான். இந்த செயலியில் பின்பற்றப்படும் முக்கிய அம்சம் தான் நாம் ஒருவருக்கு அனுப்பும் செய்திகளை மற்றொருவர் பார்க்க கூடாது என்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் (End to End Encryption) வசதி.

இந்த வசதியை எதிர்க்கும் வகையில் அண்மையில் மத்திய அரசு ஒரு புதிய தொழில்நுட்ப சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மத்திய தொழில்நுட்ப பிரிவு சட்டம் 2021-ன் படி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி போலி செய்திகளையும் மற்றும் தகவல்களை நாட்டின் பாதுகாப்புக்காக கண்டறிய வேண்டும் என்றும், மேலும் செய்தி பகிர்வு செயலி வாயிலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும் சேமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

ஆனால் இதனை வாட்ஸ்அப் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில், வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் செயலிகள் தரப்பில் வழக்கு (WhatsApp Recent Case) தொடரப்பட்டது. WhatsApp தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் கூறுகையில், தொழில்நுட்ப நிறுவனங்களிடம் எந்தவித ஆலோசனையும் இன்றி மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்றும் மேலும் இது தனி மனித சுதந்திரத்தை பாதிக்கும் விஷயம் என்றும் கூறினார்.

WhatsApp Recent Case

தொடர்ந்து வாதிட்ட அவர் மத்திய தொழில்நுட்ப பிரிவு சட்டம் 2021-ன் பிரிவு 14,19, 21 ஆகியவை தனிமனித உரிமைக்கு எதிரானவை என்று கூறினார். மேலும் இந்த சட்டத்தின் படி எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் (End to End Encryption) வசதியை மத்திய அரசு நீக்க கூறினால் அது தனிமனித பாதுகாப்புக்கு எதிராக இருக்கும் என்று கூறினார். மேலும் இவ்வாறு நடைபெற்றால் நாங்கள் இந்தியாவில் இருந்து வெளியேறும் சூழல் ஏற்படும் (WhatsApp Warning) என்றும் அவர் கூறியுள்ளார். இந்த WhatsApp Case வாட்ஸ்அப் பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: AC வாங்க போறீங்களா? அப்ப இத பாத்துட்டு போங்க..! இதுவரை யாரும் கூறாத ஆலோசனைகள்..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular