Homeசெய்திகள்31.6 லட்சத்திற்கு விற்கப்படும் பழம்..! என்ன பழம் அது? எங்கு கிடைக்கிறது?

31.6 லட்சத்திற்கு விற்கப்படும் பழம்..! என்ன பழம் அது? எங்கு கிடைக்கிறது?

கோடை காலம் தொடங்கியது முதல் பழங்களை தான் மக்கள் அதிகம் உண்ணுகின்றனர். இந்த கோடையில் பலருக்கும் காரமாண உணவுகள் போன்றவற்றை உண்பதை காட்டிலும் இது போன்ற பழங்கள் மற்றும் பழத்தினால் செய்யப்பட்ட பழச்சாறுகள் போன்றவற்றை தான் அதிக அளவில் மக்கள் விரும்பி உண்ணுகின்றனர்.

இதன் காரணமாவே கோடை காலங்களில் பழங்களின் விலையும் அதிகரித்து விடுகிறது. அதிலும் குறைவாக உற்பத்தி செய்யப்படும் பழங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அதன் விலை மிகவும் அதிகமாக இருக்கும். இந்த வெயில் காலத்தில் மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று தான் முலாம் பழம்.

இந்த பழம் மற்ற காலங்களை விட கோடை காலத்தில் அதிக அளவில் விளையும். இந்த முலாம் பழத்தில் நீர்சத்து மிகவும் அதிகமாக இருப்பாதால் இந்த வெயில் காலத்திற்கு இது மிகவும் ஏற்றப்பழமாக இருக்கும். மேலும் இந்த பழத்தை உண்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மேலும் இது ரத்த அழுத்தத்தை குறைப்பதாவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் தற்போது இந்த பழம் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் (World Costliest Fruit in Tamil) வெளியாகியுள்ளது. இதன் படி ஜப்பானில் யுபாரி என்ற பகுதியில் விலை உயர்ந்த யூபரி கிங் முலாம் பழங்கள் (Yubari King Melon) விளைகின்றன. இவை சிறந்த முறையில் விளைவிக்கப்படுவதால், இங்க விளைவிக்கப்படும் ஒரு ஜோடி முலாம் பழத்தின் விலை இந்திய மதிப்பில் ரூ.31.6 லட்சம் ஆகும். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும் இந்த பழத்தின் சுவையும், நறுமணமும் நன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Yubari King Melon
இதையும் படியுங்கள்: சித்திரை திருவிழா: உள்ளூர் விடுமுறையை அறிவித்தார் மதுரை மாவட்ட ஆட்சியர்..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular