Homeசெய்திகள்உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை இன்று திறப்பு..!

உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை இன்று திறப்பு..!

இந்திய அரசியலமைப்பின் தந்தை என்று அழைக்கப்படுபவர் தான் அம்பேத்கர். இவரது இயற்பெயர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (Bhimrao Ramji Ambedkar) ஆகும். இவர் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி பிறந்தார். மேலும் இவர் நம் இந்திய நாட்டின் விடுதலைக்குப் பின் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும் பதவியேற்றார்.

அம்பேத்கர் அவர்களுக்கு இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது இவரது இறப்புக்குப் பின் 1990-ம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. நம் இந்திய நாட்டின் சட்ட புத்தகத்தை உருவாக்கியவர் என்ற பெருமையும் இவரையே சேரும். மேலும் இந்திய நாட்டிற்காக பல நம்மைகளையும் செய்துள்ளார். இந்நிலையில் இவரை பெருமை படுத்தும் விதமாக இவருக்கு புதிய சிலை ஒன்று நிறுவப்படவுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா பகுதியில் உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை (World Largest Ambedkar Statue) திறக்கப்படவுள்ளது. இந்த சிலை இன்று (18.01.2024) திறக்கப்படவுள்ளது. இந்த சிலையை அந்த மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன் மோகன் திறந்து வைக்க உள்ளார்.

இந்த அம்பேத்கர் சிலை (Ambedkar Silai) 125 அடி உயரம் சிலை கொண்டதாக உள்ளது. மேலும் இந்த சிலை 81 அடி உயரம் உள்ள பீடத்தின் மீது உள்ளது. இச்சிலையின் மொத்த உயரம் 206 அடி ஆகும். இந்த சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு ஸ்மிருதி வனம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

Largest Ambedkar Statue
இதையும் படியுங்கள்: பல வருடங்களுக்கு பிறகு அம்பேத்கரின் கனவை நிறைவேற்றிய உச்சநீதிமன்றம்..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular