Homeசெய்திகள்வங்கிகளில் சுமார் 5.3 லட்சம் கோடி மோசடி..! வெளியான அதிர்ச்சி தகவல்..!

வங்கிகளில் சுமார் 5.3 லட்சம் கோடி மோசடி..! வெளியான அதிர்ச்சி தகவல்..!

வங்கிகளில் நடைபெறும் பண மோசடிகள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது. இந்தநிலையில் தான் தற்போது ஆர்பிஐ ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதன் படி கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் சுமார் 5.3 லட்சம் கோடி வரை பண மோசடி நடந்துள்ளதாக தகவல் (Fraud in Banks) வெளியாகியுள்ளது. இந்த தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தான் கடந்த பத்து வருடங்களில் மட்டும் இந்திய வங்கிகளில் சுமார் 5.3 லட்சம் கோடி பணம் மோசடி (Bank Fraud in Last Ten Years) செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆர்டிஐ எழுப்பிய கேள்விக்கு ஆர்டிஐ பதிலளித்துள்ளது. இதன்படி கடந்த 2013-ம் ஆண்டு முதல் தற்போது நடைபெறும் 2024-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் இந்திய வங்கிகளில் இவ்வளவு பெரிய தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது என்று RBI கூறியுள்ளது.

மேலும் இந்த 2013 முதல் 2024 வரையுள்ள பத்து ஆண்டுகளில் மட்டும் சுமார் 4,62,733 மோசடிகள் செய்யப்பட்டுள்ளன என்றும் Reserve Bank Of India தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 2.24 லட்சம் கோடி அளவுக்கு பண மேசடி நடைபெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி தற்போது அதிக அளிவிலான மக்களால் பயன்படுத்தப்படும் ஆன்லைன் பரிவர்த்தனைகளிலும் அதிக அளவிலான மோசடிகள் (Vangi Mosadi) நடைபெறுகிறது என்றும் கூறியுள்ளது. அதன்படி ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் 6,639 மோசடிகள் நடைபெற்றுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த மோசடி தகவல் (Bank Rabbury in India) மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bank Fraud in Last Ten Years
NPCIL Recruitment 2024: ஐடிஐ முடித்தவர்களுக்கு டிரேட் அப்ரண்டிஸ் அறிவிப்பு வெளியீடு..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular