Homeசெய்திகள்மனசினுள்ளே தாகம் வந்துச்சா வந்துச்சா.. நடிகை கோபிகாவை நியாபகம் இருக்கா?

மனசினுள்ளே தாகம் வந்துச்சா வந்துச்சா.. நடிகை கோபிகாவை நியாபகம் இருக்கா?

தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் கேரளாவில் இருந்தான் தமிழ் சினிமா துறையில் நுழைகிறார்கள். அவ்வாறு தமிழ் சினிமாக்களில் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கி கொண்டவர்கள் சிலர். அந்த வரிசையில் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவில் நுழைந்த நடிகை தான் கோபிகா.

இவர் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர். இவர் தமிழ் சினிமாவில் குறைந்த அளவு படங்கள் நடித்திருந்தாலும், ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் என்றே கூறலாம். இவர் தமிழில் ஆட்டோகிராப், தொட்டி ஜெயா, எம்டன் மகன், கனா கண்டேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இந்த படங்கள் எல்லாம் அப்போதைய சூப்பர் ஹிட் படங்களாகும். இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகை கோபிகா அஜிலேஸ் சாக்கோ என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அதன் பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட நடிகை கோபிகா குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார்.

தனது முழு நேர பணியும் தனது குடும்பத்துடன் மட்டுமே செலவிடுவதை அவர் கொண்டிருந்தார். இந்நிலையில் கோபிகா தன்னுடைய குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் (Actress Gopika Family) தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

இதனை கண்ட அவரின் ரசிகர்கள் இது கோபிகாவா என ஆச்சரியமாக கேட்டு வருகிறார்கள். அந்த புகைப்படங்களில் கோபிகா உடல் மெலிந்த நிலையில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மெலிந்து போய் காணப்படுகிறார்.

இதனால் அவரின் ரசிகர்கள் தற்போதும் கோபிகா இளமையாகவே உள்ளார் என்றும், அவர் மீண்டும் கதாநாயகியாக நடிக்கலாம் என்றும் கூறி அவரின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் (Actress Gopika Recent photos) பகிர்ந்து வருகின்றனர்.

Actress Gopika Recent photos
மேலும் படிக்க: சீதையாக நடிக்கும் சாய் பல்லவி..! அப்போ ராமர் யார்?
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular