Homeவிளையாட்டுபிரபல விக்கெட் கீப்பர் ஓய்வை அறிவித்தார்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பிரபல விக்கெட் கீப்பர் ஓய்வை அறிவித்தார்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பிரபல கிரிக்கெட் அணிகளில் ஒன்றுதான் ஆஸ்திரேலியா அணி. இந்த அணியில் உள்ள வீரர்களின் விளையாட்டு திரனை பற்றி கூறவேண்டியது இல்லை. அந்த அளவுக்கு ஒவ்வொரு வீரரும் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்துவர். அந்த வரிசையில் தான் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரராக இருப்பவர் தான் மேத்யூ வேட். இவர் ஒரு சிறந்த விக்கெட் கீப்பரும் (Australian Wicket Keeper Matthew Wade) ஆவார்.

சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராக உள்ள மேத்தியு வேட் திடீரென தனது ஓய்வை அறிவித்துள்ளார். இவருக்கு தற்போது 36 வயது ஆகிறது இதற்கு முன்னர் இவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார். எனினும் வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ள டி20 உலக கோப்பையில் அவர் விளையாடுவார் என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி அவர் ஒருநாள் போட்டிகளிலும் தொடர்வார் என்றும் கூறியுள்ளார். இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மேத்தியு வேட் (Australian Player Matthew Wade) மொத்தம் 1613 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ஐபிஎல் போட்டிகளிலும் தொடர்வார் என்றும் கூறியுள்ளார்.

Australian Wicket Keeper Matthew Wade

இவர் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். மேத்தியு வேட் (Matthew Wade) விளையாடும் அணிக்காக சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தும் வீரர் ஆவார். மேலும் இந்த வருட ஐபிஎல் தொடரில் இவர் முதலில் நடைபெறும் சில போட்டிகளில் கலந்துக்கொள்ளமாட்டார் என்றும் கூறப்படுகிறது. எனினும் அடுத்து நடைபெறும் போட்டிகளில் இவர் கலந்துக்கொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: ஹோலி பண்டிகை அன்று நிகழ இருக்கும் அதிசயம்..! என்ன தெரியுமா?
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular