Homeசெய்திகள்தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை..! என் தெரியுமா?

தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை..! என் தெரியுமா?

நம்மில் அனைவருக்கும் பிடித்த மிட்டாய்களில் ஒன்று தான் இந்த பஞ்சு மிட்டாய். இந்த மிட்டாய்கள் பொதுவாக சாலை ஓரங்களில் விற்கப்படும். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். இந்த பஞ்சு மிட்டாய்களை பிடிக்காத ஆட்களே இருக்க முடியாது என்று தான் கூற வேண்டும். இந்நிலையில் தான் தற்போது இந்த மிட்டாய்களின் புற்றுநோய் பரவுவதாக கூறி தற்போது இது தடை (Cotton Candy Banned) செய்யப்பட்டுள்ளது.

பல இடங்களில் விற்கப்படும் இந்த பஞ்சு மிட்டாய்களை பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு வாங்கி கொடுப்பார். சில சமயங்களில் அவர்களும் உண்பது உண்டு. இதுபோல பலரின் விருப்பத்திற்குரிய மிட்டாயாக இருக்கும் இந்த பஞ்சு மிட்டாய் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கிறது என்று கூறி சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி அரசு தடை விதித்தது.

இந்த பஞ்சு மிட்டாய் பச்சை, ஊதா மற்றும் ரோஸ் உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்கிறது. இவற்றில் பச்சை மற்றும் ஊதா ஆகியவற்றில் சேர்க்கப்படும் நிறமிகள் புற்றுநோயை உண்டாக்கும் ரோடமைன் பி என்ற ரசாயனம் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக சென்னையில் மெரினா கடற்கரையில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்விற்கு பின்னர் வெளியான முடிவுகள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த பஞ்சுமிட்டாய்களிலும் புற்றுநோயை உருவாக்கும் நிறமி சேர்க்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Cotton Candy

இந்த ஆய்வில் முடிவுகள் தமிழக முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பஞ்சு மிட்டாய்களில் புற்றுநோயை உண்டாக்கும் நிறமி சேர்க்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ள காரணத்தால் விரைவில் தமிழகத்திலும் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை (Cotton Candy Banned in Tamilnadu) செய்யப்படும் என தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்கள்: இனி ரேஷன் கடைகளில் பாமாயில் கிடையாது..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular