Homeதொழில்நுட்பம்ESIM Card ஆக மாறும் SIM கார்டுகள்..! ESIM மூலம் ஏற்படும் நன்மைகள் என்ன..!

ESIM Card ஆக மாறும் SIM கார்டுகள்..! ESIM மூலம் ஏற்படும் நன்மைகள் என்ன..!

இன்றைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன் என்பது அத்தியவசியமான ஒன்றாக மாறிவிட்டது எனலாம். இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை உணவின்றி கூட வாழ்ந்து விடுவார்கள் ஆனால் போன் இல்லாமல் வாழ மாட்டார்கள். இந்த மொபைல்களில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மொபைலில் பயன்படுத்தும் SIM Card -லும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது சிம் கார்டு ஆனது ESIM ஆக மாறியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அனைத்து செல்போன் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பல வடிவங்களிலும், பலவகையான மாற்றங்களுடன் அவர்களது Mobile Phone Update செய்து கொண்டே வருகின்றனர். அதற்கு ஏற்றார் போல் நாம் பயன்படுத்தும் சிம் கார்டுகளிலும் மாற்றம் ஏற்படுகிறது.

அந்த வகையில் SIM, Micro SIM, Nano SIM, ESIM என காலத்திற்கு ஏற்றார் போல் சிம் வடிவமும் மாறி வருகிறது. நமது வலைதளத்தில் ESIM Meaning in Tamil என்பதை பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் விரிவாக பார்க்கலாம்.

SIM என்றால் என்ன (What is SIM in Tamil)

SIM Full Form Subscriber Identity Module ஆகும். இந்த சிம் என்பது ஒரு சர்வதேச மொபைல் சந்தாதாரர் அடையாள (IMSI) எண் ஆகும். இது அதனுடன் தொடர்புடைய விசையையும் பாதுகாப்பாக சேமிக்கும் நோக்கம் கொண்டது ஆகும்.

SIM Card என்பது போனில் போடப்படும் ஒரு Card ஆகும். சிம் கார்டு மிகவும் முக்கியமானது ஆகும். இந்த கார்டு தான் நாம் செல்போனில் உள்ள அடிப்படையான தகவல்களை சேமித்து வைத்துக்கொள்ளும். குறிப்பாக நாம் தொடர்பு கொள்ளும் எண்கள் எல்லாம் பதிவு செய்யப்படும். இந்த சிம் கார்டு வாங்க நாம் நமது ஆதார் கார்டை அடையாள ஆவணமாக பயன்படுத்த வேண்டும்.

1991 ஆம் ஆண்டில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட சிம் கார்டானது கிரெடிட் கார்டு அளவில் இருந்தது. தற்போது மொபைல்களில் மாற்றத்திற்கு ஏற்றவாறு SIM -களிலும் மாற்றம் ஏற்படுகிறது.

Micro SIM என்றால் என்ன (What is Micro SIM in Tamil)

இந்த மைக்ரோ சிம் ஆனது சிம் கார்டின் சிறிய வடிவம் ஆகும். இந்த மைக்ரோ சிம் 2010 ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்படும் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மைக்ரோ சிம் கார்டு 15 மிமீ × 12 மிமீ × 0.76 மிமீ அளவுள்ளதாக இருக்கும்.

Micro SIM Card ஆனது சிம் கார்டுடன் ஒப்பிடும்போது அளவில் சிறியது ஆகும். ஆனால் இரண்டிலும் உள்ள உலோக தகடானது ஒரே அளவில் தான் இருக்கும். எனவே சிம் கார்டை மைக்ரோ சிம் அளவிற்கு மாற்றி பயன்படுத்த முடியும்.

Smartphone SIM Card

Nano SIM என்றால் என்ன (What is Nano SIM in Tamil)

சமீபகாலமாக தயாரிக்கப்படும் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் சிம் கார்டுகளானது பெரும்பாலும் நானோ சிம் கார்டாக தான் இருக்கும். இந்த சிம் ஆனது Micro SIM Card விடவும் சிறிய வடிவம் ஆகும்.

இந்த சிம் கார்டு ஸ்மாட்போன்களில் இடத்தை குறைப்பதற்காக சிறிய வடிவில் தயாரிக்கப்படுகிறது. சிம் கார்டின் சிறிய வடிவம் மைக்ரோ சிம் என்றால் மைக்ரோ சிம்மின் சிறிய வடிவம் Nano SIM ஆகும். இது அளவில் சிறியது மட்டுமின்றி மென்மையானதாகவும் இருக்கும். இந்த நானோ சிம் கார்டின் அளவு 12.3 மிமீ × 8.8 மிமீ × 0.67 மிமீ அளவுள்ளதாக இருக்கும்.

மேலும் படிக்க: ஒரு Aadhaar Card மூலம் எத்தனை SIM கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது? கண்டுபிடிப்பது எப்படி?

ESIM என்றால் என்ன (What is ESIM in Tamil)

ESIM Full Form Evolution of SIM ஆகும். இது ஒரு டிஜிட்டல் சிம் ஆகும். இந்த சிம் ஆனது ஸ்மார்ட்போனில் சாதாரண சிம் போல் பயன்படுத்தப்படுவது அல்ல. இந்த இ சிம் ஆனது குறிப்பிட்ட உயர்தர ஸ்மார்ட்போனில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்படுகிறது. இந்த இ-சிம் கார்டின் அளவு 6 மிமீ × 5 மிமீ அளவுள்ளதாக இருக்கும்.

தற்போது நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனில் சிம் கார்டை வன்பொருள் வடிவிலான பயன்படுத்துகிறோம். அதனை மென்பொருள் வடிவில் பயன்படுத்துவதே இ சிம் கார்டு ஆகும். இந்த சிம் ஸ்மார்ட்போனின் மதர் போர்டில் பொருத்தப்பட்டு இருக்கும். ஒருவர் சாதாரன சிம் கார்டிலிருந்து இசிம் கார்டிற்கு மாற்ற அவர் பயன்படுத்தும் சிம் கார்டு நிறுவனத்தை அணுகி மாற்றி கொள்ளாம்.

ஆனால் இந்த ESIM ஆனது இந்தியாவில் Airtel, Jio மற்றும் Vodafone Idea ஆகிய நிறுவனங்கள் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு செல்லுலார் பிளான்கள் மூலம் ESIM வழங்குகின்றது. எதிர்காலத்தில் இந்த சிம் அனைவருக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Benefits of ESIM

ESIM Card பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் (Benefits of ESIM)

இந்த இ-சிம் ஆனது மற்ற சிம்கள் போல் இல்லாமல் போன்கள் உள்ளேயே பொருத்தப்படுகின்றன. எனவே அடிக்கடி இவற்றை மாற்ற முடியாது. இப்போது இந்த ESIM Card மூலம் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

  • இ சிம் கார்டில் IMSI எண்ணை மாற்ற முடியும். அதாவது இந்த சிம் மூலம் ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கிற்கு மாற்ற முடியும்.
  • இந்த இசிம் ஆனது சென்சார் மாதிரி போன் போடிலேயே இருப்பதால் அடிக்கடி சிம் மாற்ற வேண்டாம்
  • இசிம் Phone உள்ளேயே இருப்பதால் சிம் கார்டு தொலைந்து போகாது.
  • SIM, Micro SIM, Nano SIM போல் கையில் எடுத்து பயன்படுத்த தேவை இல்லை.
  • மற்ற சிம்கள் உடைய வாய்ப்பு உள்ளது ஆனால் இசிம் உடையாது.
  • Phone திருட்டு போனால் மற்ற சிம்கள் போல் இ சிம் கார்டை கழற்றி தூக்கி போட முடியாது. இதன் முலம் தொலைந்த போனை கண்டுபிடிக்கலாம்.
  • இ சிம் இருக்கும் போன்களில் இரண்டு சிம் சர்வீசுகள் கூட உள்ளது. அதாவது ஒன்றுக்கும் மேற்பட்ட Mobile Number பயன்படுத்தலாம்.
  • இந்த சிம்மை மற்ற கருவிகளுடன் Bluetooth மூலம் இணைக்கலாம்.
  • இ சிம் உள்ள ஸ்மார்ட்போனை கைகளில் கட்டும் ஸ்மார்ட் வாச்சுகளுடன் இணைத்துக்கொள்ளலாம்.

ESIM Card தீமைகள்

  • போன் மதர்போடிலேயே இருப்பதால் மற்ற சிம்கள் போல் இசிம் உடனடியாக மாற்ற முடியாது. உதாரணமாக நாம் பயன்படுத்தும் போன் வேலை செய்யவில்லை என்றால் இந்த சிம்மை எடுத்து மற்றொரு போனில் போட முடியாது.
  • இந்த சிம் விலையானது இந்தியாவில் மிகவும் அதிகமாக உள்ளது. ஆனால் அனைவராலும் இந்த சிம் கார்டை வாங்க முடியாது.

இப்பதிவின் மூலம் வருங்காலத்தில் நாம் பயன்படுத்த உள்ள இந்த ESIM Endral Enna மற்றும் Benefits of ESIM in Tamil போன்றவற்றை பற்றி தெளிவாக தெரிந்து கொண்டோம்.

மேலும் படிக்க: Poco C65: 8,400 ரூபாயில் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம்…

ESIM Card – FAQ

1. What is the full form of a SIM Card?

SIM Card Full Form Subscriber Identity Module ஆகும்

2. ESIM Card-ன் அளவு என்ன?

இந்த இ சிம் கார்டானது 6மிமீ × 5மிமீ அளவில் இருக்கும்.

3. இந்த ESIM Card இந்தியாவில் கிடைக்கிறதா?

ஆம், இந்தியாவில் Airtel, Jio மற்றும் Vodafone Idea ஆகிய நிறுவனங்கள் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு இ சிம்மை வழங்குகிறது.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular