Homeஆன்மிகம்கருங்காலி மாலை பற்றி ஆச்சிரியமூட்டும் தகவல்கள்..!

கருங்காலி மாலை பற்றி ஆச்சிரியமூட்டும் தகவல்கள்..!

கருங்காலி மாலை என்பது தற்போது அனைவர் மத்தியிலும் பிரபலமாக உள்ளது. இந்த மாலையை தான் ருத்ராட்ச மாலை என்கிறார்களா? என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். ஆனால் ருத்ராட்ச மாலை வேறு கருங்காலி மாலை வேறு.

பொதுவாக பெண்கள் செயின் அல்லது மணி அணிவார்கள். ஆண்கள் செயின், ருத்ராட்சம் செயின் அல்லது பிரசிலேட் அணிவார்கள். இந்த கருங்காலி மாலையை ஆண் பெண் என அனைவரும் பயன்படுத்தலாம். இந்த மாலையை தற்போது பிரபலமாக உள்ள நடிகர்கள் அணிகின்றனர். அதை பார்க்கும் இன்றைய இளைஞர்களும் வாங்கி அணிய ஆசைப்படுகிறார்கள்.

ஆனால் இந்த Karungali Malai -ஐ பயன்படுத்தலாமா, அணிந்து கொண்டால் என்ன நன்மை நடக்கும் என்பதை பற்றி தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது. எனவே இந்த பதிவில் Karungali Malai Payangal in Tamil பற்றி பார்க்கலாம்.

karungkali Malai

கருங்காலி மாலை என்றால் என்ன? (What is Karungali Malai)

இந்த கருங்காலி மாலை என்பது நிறைய நாள் வாழ்ந்த நன்றாக வைரம் பாய்ந்த மரத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த மரமானது வரச்சியை தாங்கி வளரக் கூடிய மரம் ஆகும். இந்த வகையான மரம் உலகிலேயே அதிக வெப்பம் மிகுந்த நாடான ஆப்பிரிக்க காடுகளில் தான் அதிகமாக இருக்கும்.

இந்த கருங்காலி மாலையில் 108 மணிகள் இருக்கும். இந்த மாலையை ஆண் பெண் என இருபாலரும் அணிந்து கொள்ளலாம். இந்த Karungali Malai கதிர்வீச்சுக்களை ஈர்க்கும் சக்திகளை கொண்டது எனவே நமது எதிர்மறை எண்ணங்களை இந்த மாலை போக்கி நேர்மறை எண்ணங்களை நமக்கு தரும் என நம்பப்படுகிறது.

கருங்காலி மாலையின் பயன்கள் (Benefits of Karungali Malai)

இந்த கருங்காலி மாலையை நாம் அணிவதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. இந்த வகை மரத்தில் இயற்கையாகவே கார்பன் தன்மை இருப்பதால் இது நம்மிடம் இருக்கும் Negative Vibration -களை அதிகமாக ஈர்த்துக்கொள்ளும்.

இந்த மாலை அணிவதால் நாம் நல்ல எண்ணங்களுடனும், தெளிவான எண்ணங்களுடனும் செயல்படுவோம்.

மனிதர்களிடம் இயல்பாகவே பொறாமை எண்ணம் இருக்கும், அதாவது ஒருவர் மற்றொருவரின் மகிழ்ச்சியான வாழ்க்கை, பணம், குணம், பொருட்கள் மற்றும் உடல் ஆரோக்கியம் போன்றவற்றை பார்த்து பொறாமைப் படுவார்கள். இதனை பொறாமை அல்லது கண் திருஷ்டி எனவும் கூறலாம். இவற்றில் இருந்தும் விடுபடுவதற்கும், வராமல் இருப்பதற்கும் கருங்காலி மாலை உதவுகிறது.

Karungali Malai

ஆன்மீகம் சார்ந்த நன்மைகள்

இந்த Karungali Malai -ல் தெய்வீக சக்தி அதிகமாக இருக்கிறது என்று நம்பப்படுகிறது. எனவே அதை அணிபவருக்கு தெய்வத்தின் அருள் கிடைக்கும் என்றும் பணப் பிரச்சனை இருக்காது என்றும் கூறப்படுகிறது.

இந்த மாலையை அணிவதால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் கேடுகள் குறையும். ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் இதனை அணியலாம்.

இந்த கருங்காலி மாலை நவகிரகங்களின் தோஷங்கள் மற்றும் பாதிப்புகளை கட்டுப்படுத்துகிறது.

இந்த கருங்காலி மாலையில் அனைத்து தெய்வங்களும் இருப்தாக கருதப்படுகிறது. இந்த மாலையை அணிந்தாலோ, வீட்டில் வைத்து வணங்கிணாலோ அனைத்து தெய்வத்தின் அருளும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

இந்த மாலையில் அனைத்து தெய்வங்களின் அருளும் இருப்பதால் இதனை வழிபட்டால் குலதெய்வத்தின் அருளும் கிடைக்கும்.

உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

இந்த Karungali Malai ஆன்மீகம் சார்ந்த நம்பிக்கை மட்டும் தராமல். இதை அணிவதால் பல நன்மைகள் உடலுக்கம் செய்கிறது. எனவே இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமாலும் அணியலாம்.

  • இநத மாலை உடலுக்கு Positive Vibration தருவதால் இது உடலில் உள்ள இரத்ததை சுத்தப்படுத்துகிறது.
  • உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது.
  • செரிமான பிரச்சனை இருந்தால் அதை சரிசெய்யும்.
  • பெண்களுக்கு உள்ள மாதவிடாய் பிரச்சனை நீங்கும்.
  • கோபம் கொள்வார்கள் இந்த மாலை அணிந்தால் கோபம் குறையும்.
  • குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும்.
  • மன சோர்வை நீக்கி புத்துணர்ச்சியை தரும்

எந்த நேரத்தில் இந்த மாலையை அணிய வேண்டும்

இந்த கருங்காலி மாலை செவ்வாய் பகவானுக்கு உகந்த மாலை. எனவே இந்த மாலையை செவ்வாய் கிழமையில் நல்ல நேரம் பார்த்து அணிந்து கொள்வது சிறப்பு. இந்த மாலையை செவ்வாய் கிழமை, 9,18,27 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் அணிந்து கொள்வது நன்மை தரும். முருகப்பெருமான் மற்றும் வராஹி அம்மன் பாதத்தில் வைத்து வணங்கிய பிறகு இந்த மாலையை அணிவது சிறந்து.

Karungali Malai Original

Karungali Malai எந்த சமயத்தில் அணிய கூடாது

  • இறந்தவர்கள் வீட்டிற்கு செல்லும் போது இந்த மாலையை அணிந்திருக்க கூடாது.
  • அசைவம் சாப்பிடும் போது இந்த மாலை அணிய கூடாது. அப்போது இந்த மாலையை கழட்டி வைத்து விட வேண்டும்.
  • பணம் வைக்கும் இடத்தில் இந்த மாலையை வைக்க கூடாது.
  • பெண்கள் மாதவிடாய் நாட்களில் இந்த மாலையை அணிய கூடாது.

Karungali Malai அணிய முறைகள்

  • இந்த மாலையை வெளியே தெரியும் படியும் போடலாம், தெரியாத படியும் போடலாம்.
  • இந்த மாலையை கழற்றி விட்டு மீண்டும் போடும் போது நீரில் நன்றாக அலசி விட்டு போட வேண்டும்.
  • இந்த மாலையை கழுத்திலும் அணியலாம், கைகளில் பிரேஸ்லெட்டாக மாதிரியும் அணியலாம், இலை என்றால் சாமி அறையில் வைத்து பூஜை செய்யலாம்.

உண்மையான கருங்காலி மாலை கண்டுபிடிப்பது எப்படி

தற்போது ருத்ராட்ச மாலையை விட அனைவர் மத்தியிலும் கருங்காலி மாலை ஆனது பிரபலமாக உள்ளது. இததால் அதிக அளவில் இந்த மாலை மக்களால் வாங்கப்படுகிறது. அதே சமயம் போலியான மாலையும் விற்கப்படுகிறது. இந்த போலியான மாலையை கண்டுபிடிப்பதற்கான வழிகள் என்ன என்பதை பார்க்கலாம்.

  • கருங்காலி மாலை உண்மையானதா என்பதை கண்டுபிடிக்க ஒரு பாத்திரத்தில் நீரை எடுத்துக் கொள்ளவும். அதில் அந்த மாலையை வைக்கவும். தண்ணீரின் நிறம் மாறாமல் இருந்தாலோ அல்லது கருப்பாக மாறினாலோ அந்த மாலை போலியானது. உண்மையான மாலை தண்ணீரில் போட்டால் பழுப்பு நிறத்தில் தண்ணீராக மாறும்.
  • தண்ணீரில் எண்ணெய் போல் கருங்காலி மாலையில் உள்ள சாருகள் மிதக்க வேண்டும் அவ்வாறு இல்லை என்றால் அது போலியான மாலை.
  • மாலையில் உள்ள ஒரு மணியை எடுத்து உடைத்தால் அது வெள்ளை அல்லது மரத்தின் நிறத்தில் இருந்தால் அது போலியானது ஆகும். உண்மையான மணியானது கருமையாக அல்லது காபி பிரவுன் நிறத்தில் இருக்கும்.

இவ்வாறு உண்மையான மாலை என்ன என்பதை கண்டறிந்து உண்மையான மாலையை வாங்கி பயன்படுத்துங்கள். மேல் உள்ள பதிவின் மூலம் Karungali Malai Endral Enna in Tamil பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க: விளக்கு ஏற்றும் முறைகள்..!

Karungali Malai – FAQ

1. கருங்காலி மாலை எதிலிருந்து கிடைக்கிறது?

இந்த மாலை நன்றாக வைரம் பாய்ந்த மரத்தில் இருந்து செதுக்கி செய்யப்படுகிறது.

2. கருங்காலி மாலையில் எத்தனை மணிகள் இருக்கும்?

இந்த கருங்காலி மாலையில் மொத்தம் 108 மணிகள் இருக்கும்.

3. கருங்காலி மாலை விலை எவ்வளவு?

உண்மையான மாலை அதிக விலை கொண்டது. போலியான மாலை 1000 ரூபாக்கும் குறைவாக கிடைக்கும்.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular