Homeஆன்மிகம்Varahi Amman: அற்புதங்கள் செய்யும் வராகி அம்மன் வரலாறு..!

Varahi Amman: அற்புதங்கள் செய்யும் வராகி அம்மன் வரலாறு..!

இந்த பதிவில் வராகி அம்மன் பற்றியும், வராகி அம்மனை வழிபடுவரால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் (Varahi Amman in Tamil) தெரிந்து கொள்ள உள்ளோம். தெய்வ பக்தி என்பது பழங்காலத்தில் இருந்தே நமது நாட்டில் பரவலாக இருந்து வருகின்ற ஒன்று ஆகும். ஒவ்வொரு மாதங்களுக்கு ஏற்றார் போல் கிழமைகளுக்கு ஏற்ப தெய்வங்களை வழிபடுவதும், விரதம் இருப்பதும் தொன்று தொட்டு பின்பற்றப்படுகின்றன.

இந்த உலகையே படைத்தவர் இறைவன் தான். உலகில் உள்ள அனைத்து உயிர்களையும், பொருட்களையும் உருவாக்கியவரும் இறைவன் தான். கடவுள் மக்களை தீமைகளில் இருந்து காத்தும் நல்வழியில் வழிநடத்தியும் செல்கிறார். மும்மூர்த்திகளான பிரம்மர், பெருமாள் மற்றும் சிவன் உலகிள் உள்ள அனைத்தையும் உருவாக்கி உள்ளதாக இதிகாசங்கள் கூறுகின்றன.

இவ்வுலகை வழிநடத்துவதற்காக மும்மூர்த்திகளை போலவே முப்பெரும் தேவிகளும் உள்ளன. தைரியத்தின் கடவுள் சக்தி, செல்வத்தின் கடவுளான லட்சுமி மற்றும் அறிவின் கடவுளாக சரஸ்வதி வழங்குகின்றனர். அதிலும் குறிப்பாக அனைவருக்கும் தாயார் பார்வதி அம்மனை வழிபடுவது மிகவும் சிறந்த ஒன்று ஆகும். சக்திக்கு நிறைய வடிவங்கள் உள்ளன. துர்க்கை அம்மன், பார்வதி, வராகி அம்மன் போன்ற பல ரூபங்கள் உள்ளன.

வராகி அம்மன் கதை (Varahi Amman Kathai) – Varahi Amman History in Tamil

அன்னை பார்வதியின் அம்சம் தான் வராகி அம்மன் என இதிகாசங்கள் கூறுகின்றன. இந்த உலகில் உள்ள அனைத்து மக்களையும் காப்பதற்காக மாகா சக்தியான பார்வதி தேவி வராகி அம்மனாக தொற்றம் எடுத்துள்ளார். ஒரு காலத்தில் ரத்த பீஜன் என்கிற அரக்கன் மக்களை துன்புறுத்தி. அப்போது மக்களை காப்பாற்றுவதற்காக தேவி பார்வதி ரத்த பீஜன் என்ற அரக்கனுடன் போரிடுகிறாள்.

அப்போது தன்னிடம் உள்ள சக்தியை ஏழு பாகங்களாக பிரிக்கிறாள் பார்பதி தேவி. அந்த ஏழு பாகங்களாக இருந்த சக்தியை ஏழு கண்ணியர்களாக மாற்றுகின்றனர். பிரம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கெளமாரி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியே ஏழு கண்ணிகளில் பன்றியின் முகமும், பெண்ணின் உடலும் கொண்டவள் வாராகி அம்மன். அந்த சப்த கண்ணியர்களும் அரக்கன் ரத்த பீஜனுன் போரிட செய்யகிளார் பார்வதி தேவி என்று இதிசாரசங்கள் கூறுகின்றன.

அதேபோல் பெருமாள் அனைத்து உயிர்களையும் அரக்கர்களிடம் இருந்து காப்பரற்காகவும், மக்களை நல்பழி படுத்துவதற்காகவும் பத்து அவதாரங்கள் எடுத்தார். அந்த பத்து அவதாரங்களில் மூன்றாவது அவராரமான வராக அவராரத்தின் போது அவரின் மனைவி அவதாரமாக லெட்சுமி தாயார் வராகி அம்மன் அவதாரம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

Varahi Amman History in Tamil

வராகி அம்மன் தலை காட்டு பன்றியின் தலை போலவும், உடல் மனித உடல் போலவும் இருக்கும். மேலும் பெண் தெய்வமான வராகி அம்மன் எட்டு கைகள் கொண்டுள்ளார். அவற்றில் ஒரு கையில் ஸ்ரீ சக்கரம், ஒரு கையில் சங்கு, ஒரு கரத்தில் ஏர்களப்பை, ஒரு கையில் சூலம், ஒரு கையில் கதாயுதம், ஒரு கையில் அங்குசம், மற்ற இரு கரங்களிலும் அபய மற்றும் வரத முத்திரைகளுடன் காட்சி தருகிறார். பொதுவாக வராகி அம்மன் கருமை நிற ஆடை அணிந்து சிம்ம வாகனத்தில் இருப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

வராகி அம்மன் வழிபடும் முறை

வராகி அம்மன் தெய்வீக குணமும், விளங்கின் ஆற்றலும் பெற்றுள்ளார். தாய்மை உனர்வும் தயாள குணம் கொண்ட வராகி அம்மன் விளங்கு தலை கொண்டுள்ளதால் மூர்க குணமு் கொண்டுள்ளால். எனவே வராகி அம்மன் உக்ர தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர்.

வராகி அம்மனை வழிபடுபது என்பது நமது நாட்டில் மிக பலமையான காலத்தில் இருந்தெ நடைபெற்று வருகிறது என வரலாற்று ஆய்வாழர்கள் கூறுகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் வராகி அம்மன் வழிபாடு இருந்திருகிறது. தமிழகத்தை ஆண்டு சோல அரசர்கள் வராகி அம்மனை போருக்கு செல்லும் முன்பு வணங்கி உள்ளனர். வராகி அம்மனை வழிபட்டால் வெற்றி நிச்சயம் என கருதப்பட்டுள்ளது. எனவே தஞ்சையை ஆண்ட ராஜ ராஜன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலில் வராகி அம்மன் சன்னிதானம் உள்ளது.

  • வராகி அம்மனை வழிபட விரும்புபவர்கள் மனதில் எந்த வித தீய எண்ணங்களும் இன்றி தூய எண்ணத்துடன் வழிவட வேண்டும்.
  • அந்தி வேலை (மாலை நேரம்) வராகி அம்மனை வழிபடுவது நல்லது. இரவு நேரத்தில் வராகி அம்மனை வணங்கி பூஜைகள் செய்வதால் பலன் கிடைக்கும்.
  • வராகி அம்மனுக்கு உரிய திசை வடக்கு. எனவே வீட்டில் வராகி அம்மன் சிலை அல்லது படம் (Varahi Amman Photo) வைத்து வணங்குபவர்கள் வடக்கு திசை பார்த்தவாரு வைக்க வேண்டும்.
  • சூரியன் மறைந்த பிறகு மற்றும் சூரியன் உதிப்பதற்கு முன்பும் (அதேவது அதிகாலை வேலையில்) வராகி அம்மன் வழிபாடு மிக சிறந்தது. வடக்கு திசை பார்த்து தீபம் மற்றும் வாசனை தூபங்கள் ஏற்றி வராகி அம்மனை வழிபட வேண்டும்.
  • வீட்டில் தினமும் ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்க வேண்டும். அந்த விளக்கில் வராகி அம்மன் இருப்தாக அய்தீகம் கூறப்படுகிறது.
  • சிவப்பு நிறம் கொண்ட மலர்கள் அல்லது வாசனை மலர்களை கொண்டு அம்மனை பூஜிக்க வேண்டும்.
  • மாதுளைப் பழம், பசும்பால், பனை வெல்லம் கொண்டு செய்யப்படும் இனிப்புகள், வேகவைத்த உருளைக்கிழங்கு, உளுத்தம் பருப்பு, புளி சாதம், எலுமிச்சை சாதம் ஆகியவை வாராகி அம்மனுக்கு உகந்த பிரசாதங்கள் ஆகும்.
  • வராகி அம்மனுக்குரிய மந்திரத்தை தினமும் மனமுருக செல்லில் அம்மன் அருள் கிடைக்கும். வாராகி அம்மன் மந்திரத்தை 3, 21 அல்லது 108 முறை உச்சரிக்க வேண்டும்.
  • ஒவ்வொரு வாரமும் வராகி அம்மன் கோவிலுக்கு (Varahi Amman Temple)சென்று ஒற்றை படையில் நல்லென்னை தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் நினைத்த காரியம் கைகூடும்.

வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

  • வெள்ளிக்கிழமை வராகி அம்மனை வணங்கி விரதம் இருந்தால் கணவனின் உடல் ஆரோக்கியம் மேம்படும் மற்றும் வியாபாரத்தில் இலாபம் கிடைக்கும்.
  • செவ்வாய் கிழமை வராகி அம்மனை பூஜை செய்தால் வீட்டு மனை, சொத்து வழக்கு போன்ற சட்ட பிரச்சனைகள் தீரும்.
Benefits of Worshiping Goddess Varahi Amman
  • திங்கள் கிழமை வழிப்பட்டால் மனநோய் (மனநலம் பாதிப்பு) மற்றும் மன கவலை போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
  • ஞாயிற்று கிழமை பூஜை செய்து வழிபட்டால் நோய் நொடிகள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
  • புதன் கிழமை வராகி அம்மனை விழிப்பட்டால் கடன் பிரச்சனை தீரும்.
  • வராகி அம்மனை வியாழக்கிழமை வணங்கி பூஜை செய்தால் குழந்தை பாக்கியம் மற்றும் கல்வி ஆறிவு ஏற்படும் என கூறப்படுகிறது.

வராகி அம்மனை வழிபட உகந்த நாள்

ராசியில் சனி இருந்து சனி பகவானால் பிரச்சனைகள் இருந்தால். அவர்கள் செவ்வாய், வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் Varahi Amman ஆலையத்திற்கு சென்று வராகி அம்மனை வழிபட வேண்டும்.

பஞ்சமி, பௌர்ணமி மற்றும் அமாவாசை ஆகிய நாட்களில் வராகி அம்மனை வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.

Varahi Mantra in Tamil
மேலும் படிக்க: Perumal Avatharam: திருமாலின் பத்து அவதாரங்கள் பற்றிய சிறப்பு தகவல்கள்..!

வழிபட வேண்டியவர்கள்

வராகி அம்மன் வணங்கும் அனைவருக்கும் தைரியம் தருபவள் அவள். அதிலும் குறிப்பாக 27 நட்சத்திரங்களில் கார்த்திகை, ரோகிணி, பூசம் மற்றும் மூலம் நட்சத்திரக்காரர்கள் வாராகி அம்மனை வழிபட வேண்டும்.

12 ராசிகளில் மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் வராகி அம்மனை வழிபட்டால் அவர்கள் வாழ்வில் ஏற்பட்டுள்ள கஷ்டங்களி விழகும். குறிப்பாக சனி பகவானால் ஏற்படும் துண்பங்கள் நீங்கும்.

வராகி அம்மன் மந்திரதம் (Varahi Mantra in Tamil)

காட்டு பன்றியின் தலை மற்றும் மனித் உடல் கொண்ட வராகி அம்மனை வழிவடுவரால் வாழிவல் அனைத்து நன்மைகளும் ஏற்படும். வணங்குவர்களுக்கு தைரியம் கிடைக்கும். அவ்வாரு வராகி அம்மை வணங்கி ஆராதனை செய்யும் மூல மந்திரமானது (Varahi Moola Mantra in Tamil).

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஐம் க்லெளம் ஐம் நமோ பகவதி
வார்த்தாளி வார்த்தளி
வாராஹு வராஹி வராஹமுகி வராஹமுகி

இந்த மந்திரத்தை தொடர்நது 42 நாட்கள் வராகி அம்மன் மந்திரத்தை 108 மறை உச்சரித்து வந்தால் வாழ்வில் மகிழச்சி பெருகும். 108 முறை உச்சரிப்பதை குறித்து வைத்துக் கொள்வதற்காக மணிமாலை அல்லது பூக்களை பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க: Maha Shivaratri 2024: மகா சிவராத்திரி வரலாறு…!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular