Homeசெய்திகள்இந்தியாவில் சாலையோர கடையில் டீ குடித்த பில் கேட்ஸ்..! வைரலாகும் புகைப்படம்..!

இந்தியாவில் சாலையோர கடையில் டீ குடித்த பில் கேட்ஸ்..! வைரலாகும் புகைப்படம்..!

சேட்டைகள் செய்வதில் இந்தியர்களுக்கு நிகர் இந்தியர்கள் தான். அவர் சிறிய குழந்தையாக இருந்தாலும் சரி பெரிய தொழிலதிபராக இருந்தாலும் சரி தான். ஆனால் இதுப்போன்ற நிகழ்வுகள் அனைவருக்கும் பிடித்த விதத்திலும் பலரையும் ரசிக்க வைக்கும் விதத்திலும் உள்ளது. இது போன்று தனது செயல்களால் பிரபலமானவர் தான் டாலி (dolly) என்ற டீ மாஸ்டர். இவரது கடையும் மக்கள் மத்தியிலும் சமூக வளைதளத்திலும் மிகவும் பிரபலம்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ் தற்போது இந்தியா வந்துள்ளார். இவர் இன்று தொடங்கவுள்ள முகேஷ் அம்பானியில் இளைய மகனான ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக பில் கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். இந்த திருமணத்தின் நிகழ்ச்சிகள் குஜராத்தில் இன்று தொடங்குகிறது.

இந்நிலையில் தான் நேற்று இவர் ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்களையும் சந்தித்து உரையாடினார். இந்நிலையில் தான் இவர் மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூர் நகரில் அமைந்துள்ள சாலையோர டீக்கடையில் பில் கேட்ஸ் டீ குடித்துள்ளார்.

அதனை அவர் கடைக்காரரிடம் “ஒரு சாய் ப்ளீஸ்” என்று கேட்டு டீ குடித்துள்ளார். மேலும் சாலையோர கடையில் டீ குடித்த பில் கேட்ஸ் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் பில்கேட்ஸ் அந்த கடைக்காரரிடம் ஒரு சார் ப்ளீஸ் என்று கேட்கிறார். அப்போது அந்த கடையின் உரிமையாளர் டாலி அவருக்கு டீ தயாரிக்க தொடங்குகிறார். அப்போது பில்கேட்ஸ் அவரின் தனித்துவமான டீ தயாரிக்கும் முறை ரசித்தவாறு அவருடன் உரையாடுகிறார். அதன் பிறகு அவர் டாலியுடம் பேசிக்கொண்டே டீ பருகும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Bill Gates in Tea Stall

இதனை பில் கேட்ஸ் அவரது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, இந்தியாவில் திரும்புகிற திசை எங்கும் புதுமையை காணலாம் என்றும் அதில் தேநீர் தயாரிப்பும் அடங்கும் என்று குறிப்பிட்டு இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இதையும் படியுங்கள்: உலக அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தமிழர்..! என்ன செய்தார்?
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular