Homeசெய்திகள்கர்ப்பிணி பெண்களுக்கு ரூபாய் 11000 நிதியுதவி..! மத்திய அரசு அறிவிப்பு..!

கர்ப்பிணி பெண்களுக்கு ரூபாய் 11000 நிதியுதவி..! மத்திய அரசு அறிவிப்பு..!

இந்தியாவை பொருத்தவரையில் பெண்களுக்கு செய்து தரப்படும் சலுகைகள் என்பது சற்று அதிகமாக தான் உள்ளது. அது சிறுமியாக இருந்தாலும் சரி வயதான மூதாட்டியாக இருந்தாலும் சரி. அவர்களுக்கு தேவையான பல உதவிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. இது போல தான் பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளுக்காக ஊக்கத்தொகைகள் வழங்கப்படுகிறது. இது கல்லூரி வரையிலும் தொடர்கிறது.

அதன் பிறகு பெண் குழந்தைகளின் திருமணத்திற்கு தேவையான நிதியுதவிகள் போன்றவைகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு தான் வருகிறது. இது போல தான் மத்திய அரசின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி (Pregnant Ladies Nithi Uthavi) வழங்கப்படுகிறது. இதுக்குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

இந்த திட்டமானது (Pregnant Ladies Scheme) இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் பயனடையும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட ஒரு திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் பெயர் பிரதான் மந்திரி மாத்ரித்வா வந்தனா யோஜனா ஆகும். இந்த திட்டமானது, கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்தது.

இந்த மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தில் (Financial Support for Pregnant Women) பதிவு செய்வதன் மூலம் பெண்கள் கருவுற்றது முதல் குழந்தை பிறக்கும் வரை இந்த நிதியுதவியானது 3 தவணைகளாக, மொத்தம் ரூ.11,000 வழங்கப்படும். இதற்கு சில நிபந்தனைகளும் உள்ளது. இதன் படி இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். மேலும் கர்ப்பிணி பெண்ணிற்கு வயது 19 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.

Indian Prime Minister Modi

இந்த தகுதிகளையுடைய பெண்கள் pmmvy.wcd.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம், அல்லது அருகில் உள்ள அங்கன்வாடி மையம் அல்லது சுகாதார மையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்கள்,

  • ஆதார் அட்டை
  • முகவரி சான்றிதழ்
  • வருமான சான்றிதழ்

ஆகியவற்றை கொண்டு சென்று அருகில் உள்ள அங்கன்வாடி மையம் அல்லது சுகாதார மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

இதையும் படியுங்கள்: கங்குவா படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டார் சூர்யா..! படம் வேற லெவல்ல இருக்கும் போலயே..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular