Homeசெய்திகள்நுரையீரலில் இருந்து அகற்றப்பட்ட கரப்பான் பூச்சி..! அதிர்ச்சியில் மருத்துவர்கள்..!

நுரையீரலில் இருந்து அகற்றப்பட்ட கரப்பான் பூச்சி..! அதிர்ச்சியில் மருத்துவர்கள்..!

நம்மில் பலரும் சமையல் அறையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று என்றால் அது கரப்பான்பூச்சிகள் தான். இவற்றால் வீட்டு சமையல் அறைகளில் வரும் பிரச்சனைகள் என்பது குறைந்தது அல்லது. ஆனால் இப்போது இவற்றின் தொல்லை இன்னும் அதிகமாகிவிட்டது. மனிதனின் உடலுக்குள் சென்று பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இது மிகவும் அதிர்ச்சியாக தான் உள்ளது. ஆனால் இது போன்ற ஒரு நிகழ்வு தான் தற்போது நிகழ்ந்துள்ளது.

கேரளாவில் மாநிலத்தில் நோயாளி ஒருவர் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நோயாளியின் நுரையீரலில் இருந்து கரப்பான் பூச்சி ஒன்றை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய முதியவர் ஒருவருக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை தொடங்கியது. இந்த சிகிச்சையில் இவருக்கு கழுத்து பகுதியில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு பிராணவாயு செலுத்துவதற்காக டியூப் அமைக்கப்பட்டிருந்தது.

இதன் பிறகு இவர் வீட்டிற்கு சென்று வீட்டிலேயே ஓய்வில் இருந்தார். இந்நிலையில் இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு பல பரிசோதனைகள் செய்யப்பட்டது ஆனால் அனைத்தும் சீராக இருப்பது போலவே இருந்தது.

Cockroach Removed from a Lung

எனினும் மூச்சுத்திணறல் அவருக்கு தொடர்ந்து இருந்து வந்ததால் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையின்போது, அவரது நுரையீரலுக்குள் சுமார் 4 சென்டிமீட்டர் நீளமுள்ள கரப்பான் பூச்சி ஒன்று சிக்கி உயிரிழந்திருந்தது (Cockroach in Lung) தெரிய வந்தது.

அந்த கரப்பான் பூச்சியானது அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது (Cockroach Remove from a Lung), இப்போது அவர் நல்ல உடல்நிலையுடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு இதற்கு முன்னர் நடந்த சிகிச்சையின் போது பிராண வாயு செலுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த டியூபின் வழியே இந்த கரப்பான் பூச்சி அவரது நுரையீரலுக்குள் நுழைந்து இருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையும் படியுங்கள்: La Bougie Du SAPEUR: 4 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே வெளியாகும் செய்தித்தாள்..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular