Homeசெய்திகள்மீண்டும் இ-பாஸ் கட்டாயம்: ஐகோர்ட் உத்தரவு… அதிர்ச்சியில் மக்கள்..!

மீண்டும் இ-பாஸ் கட்டாயம்: ஐகோர்ட் உத்தரவு… அதிர்ச்சியில் மக்கள்..!

கோடை காலம் என்லாளே அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் விடுமுறை அளிக்கப்பட்டுவிடும். இதுபோன்ற விடுமுறை நாட்களில் அனைவரும் குடும்பத்துடன் சுற்றுலா பயணத்திற்கு செல்வார்கள். இந்து போன்று போகும் சுற்றுலா பயணத்திற்கு செல்பவர்களுக்கு ஐகோர்ட் ஒரு புதிய உத்தரவை (Madras High Court Order) அறிவித்துள்ளது.

ஊட்டி , கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வரும் மே 7 ஆம் தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறை அமல்படுத்த (E-Pass for Kodaikanal and Ooty) வேண்டும் என நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற நம் உத்தரவிட்டுள்ளது.

கோடை விடுமுறையை முன்னிட்டு பெரும்பாலான குடும்பங்கள் சுற்றுலா பயணமாக கொடைக்கானல் மற்றும் ஊட்டி போன்ற இடங்களுக்கு செல்வார்கள். இதன் காரணமாக அதிகப்படியான சுற்றுலா பயணிகள் ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் இருப்பார்கள் அவர்கள் வரும் வாகனங்களும் அதிகமாக இருக்கும் என்பதால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும்.

இந்த நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்கு நேற்று சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொலி வாயிலாக இந்த வழக்கில் ஆஜரானானர்கள். அரசு தரப்பில் வக்கீல் ஜெனரல் பி.எஸ். ராமன் ஆஜரானார். அப்போது அவர் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம் கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்ய இருக்கின்றன என தெரிவித்தார்.

அதன் பிறகு ஊட்டிக்கு தினமும் 1,300 வேன்கள் உட்பட 20 ஆயிரம் வாகனங்கள் வருகின்றன என கூறப்பட்டது. இதை கேட்ட நீதிபதிகள், இத்தனை வாகனங்கள் சென்றால் சுற்றுச்சூழல் என்ன ஆவது, மேலும் உள்ளூர் மக்கள் நடமாட இயலுமா என கேல்வி எழுப்பினர். அதன் பிறகு சென்னை ஐ.ஐ.டி மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம் கல்வி நிறுவனங்களின் ஆய்வு முடிவுகள் வரும் வரை இடைக்கால நடிவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

E-Pass for Kodaikanal and Ooty

அதன்படி கொரோனா காலத்தில் கடைபிடிக்கப்பட்ட இ-பாஸ் முறையை ஊட்டி மற்றும் கொடைக்கானலில் (E-Pass on Kodaikanal and Ooty) வரும் மே 7 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை நடைமுறைப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு இ-பாஸ் வாங்கி வரும் வாகனங்களில் எத்தனை பேர் வருகின்றனர், ஒரு நாள் சுற்றுலா அல்லது தொடர்ந்து தங்குவார்கள் என்பது போன்ற விவரங்களை பெற வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி… 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular