Homeவேலைவாய்ப்பு செய்திகள்8 வது தான் படிச்சு இருக்கீங்களா? தேர்வு இல்லாமல் சூப்பரான மத்திய அரசு வேலை..! மிஸ்...

8 வது தான் படிச்சு இருக்கீங்களா? தேர்வு இல்லாமல் சூப்பரான மத்திய அரசு வேலை..! மிஸ் பண்ணிடாதிங்க..!

தமிழகத்தில உள்ள நீலகிரி மாவடத்தில் சூப்பரான மத்திய அரசு வேலை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் படி நீலகிரியில் உள்ள உள்ள Ex-Servicemen Contributory Health Scheme நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு குமாஸ்தா உள்ளிட்ட 4 விதமான பணிகளுக்கான சமீபத்திய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் நீலகிரியில் உள்ள முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்ட நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ECHS Recruitment 2024 அறிவிப்பில் வெளியாகியுள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான வயது வரம்பு மற்றம் கல்வித்தகுதி உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இப்பதிவில் பார்க்கலாம்.

நீலகிரியில் உள்ள முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்ட நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான ECHS Recruitment 2024 Official Notification அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த ECHS ஆட்சேர்ப்பு 2024 நடவடிக்கையின் படி காலியாக உள்ள இளநிலை திட்ட உதவியாளர் உள்ளிட்ட 4 விதமான காலிபணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இந்த ECHS Job Notification அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ள பதவிகளுக்கான கல்வித்தகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி நான்கு விதமான பதவிகள் நிரப்படவுள்ளன. அதன்படி டிரைவர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 8 ஆம் வகுப்பு முடிக்க வேண்டும். மேலும் எழுத்தர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து பட்டப்படிப்பை முடிக்க வேண்டும். மேலும் மருந்தாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து D.Pharm மற்றும் B.Pharm முடித்திருக்க வேண்டும். பல் சுகாதார நிபுணர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் இந்த பதவிகளுக்கு எந்தவித அனுபவமும் தேவை இல்லை என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

Ex-Servicemen Contributory Health Scheme Recruitment 2024-ன் படி காலியாக உள்ள Clerk உள்ளிட்ட 4 விதமாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நேரடியாக நேர்காணலில் கலந்துக்கொள்ள வேண்டும். அதாவது முதலில் NHPC அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.echs.gov.in-க்கு செல்லவும். அதன் பிறகு தாங்கள் விண்ணப்பிக்க இருக்கும் பதவிகளுக்கான அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை முழுவதும் படித்து அதன் பிறகு விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும். அதனை முழுமையாக பூர்த்தி செய்து விண்ணப்பப் படிவம் மற்றும் தேவையான ஆவணங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவேண்டும். இது குறித்த முழு விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்கு நேரடியாக நேர்காணல் நடைபெற்று அதன் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க எந்த வித கட்டணமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ECHS Recruitment மூலம் நிரப்படவுள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 16.04.2024 முதல் 08.05.2024 வரை (ECHS Job Vacancy Last Date) விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரியில் உள்ள முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்ட நிறுவனத்தில் இருந்து வெளியாகியுள்ள இந்த பணிகளுக்கு மொத்தமாக உள்ள காலிப்பணியிடங்கள் (ECHS Job Vacancy) 4 பணியிடங்கள் ஆகும்.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது மத்திய அரசு வேலை என்பதால் சம்பளம் அதிகமாக தான் உள்ளது. அதன் படி Driverபணிகளுக்கான சம்பளம் 19,700 என்றும் Clerk பணிகளுக்கான சம்பளம் 16,800 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Pharmacist மற்றும் Dental Hygienist பதவிகளுக்கான சம்பளம் 28,100 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ECHS Trichy Velaivaippu 2024 குறித்த முழு தகவல்களுக்கு ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக பார்க்கவும்.

8 வது தான் படிச்சு இருக்கீங்களா? தேர்வு இல்லாமல் சூப்பரான மத்திய அரசு வேலை..! மிஸ் பண்ணிடாதிங்க..!

நீலகிரியில் உள்ள உள்ள Ex-Servicemen Contributory Health Scheme நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு குமாஸ்தா உள்ளிட்ட 4 விதமான பணிகளுக்கான சமீபத்திய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Salary: 16800-28100

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-18

Posting Expiry Date: 2024-05-08

Employment Type : FULL_TIME

Hiring Organization : Ex-Servicemen Contributory Health Scheme

Organization URL: echs.gov.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, Stn HQs, ECHS Cell, Wellington , Tamil Nadu, 643231, India

Education Required:

  • High School
  • Bachelor Degree

இதையும் படியுங்கள்: 10வது முடித்திருந்தால் போதும்..! தேர்வு இல்லாமல்… மாதம் ரூ. 24,960/- சம்பளத்துடன் விமான நிலையத்தில் வேலை..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular