HomeசினிமாElection Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும் தேதி குறித்து அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் திரையுலகில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் தான் உறியடி இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்றவர் தான் விஜய்குமார். இந்த படத்தை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு உறியடி 2 என்ற படத்திலும் விஜய்குமார் (Uriyadi Vijayakumar Next Movie) கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களை தவிர வேறு எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை.

ஒரு சிறு இடைவெளிக்கு பின் கடந்த 2023 ஆம் ஆண்டு இறுதியில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் தான் ஃபைட் கிளப். இந்த திரைப்படம் சிறந்த மேக்கிங்காகா பாராட்டப்பட்டது. இருப்பினும் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் விஜய்குமார் நடிப்பில் அடுத்ததாக உருவாகி (Uriyadi Vijayakumar New Movie) வரும் புதிய திரைப்படம் தான் எலக்கசன்.

கடந்த 2022 ஆம் ஆண்டு பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரித்து வெளிவந்த சேத்துமான் என்ற படத்தின் இயக்குனர் ஆன தமிழ் இந்த எலக்சன் படத்தை இயக்குகிறார். இந்த எலக்சன் (Uriyadi Vijayakumar Election Movie) திரைப்படம் இவரின் இரண்டாவது படம் ஆகும். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

Uriyadi Vijayakumar Next Movie

இந்த எலக்சன் திரைப்படத்தின் ரீல் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் திரைக்கு வரும் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. வரும் மே மாதம் 17 ஆம் தேதி இந்த எலக்சன் திரைப்படம் அனைத்து (Election Movie Release Dates) திரையரங்குகளிலும் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்னர்.

மேலும் படிக்க: என்ன சொல்ல போகிறாய்? காதலனின் காத்திருப்பின் வலி..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular