Homeவேலைவாய்ப்பு செய்திகள்மாதம் 33,630/- சம்பளத்துக்கு மாநில காப்பீட்டு நிறுவனத்தில் மத்திய அரசு வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…

மாதம் 33,630/- சம்பளத்துக்கு மாநில காப்பீட்டு நிறுவனத்தில் மத்திய அரசு வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…

ESIC Recruitment 2024: தற்போது அரசு வேலையில் சேர்வதற்காக பெரும்பாலான இளைஞர்கள் முயற்சி செய்து வருகின்றனர். அவர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியாளர்கள் மாநில காப்பீட்டு நிறுவனம் (ESIC) -ன் 2024 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிவப்பு சமீபத்தில் வெளியாகி உள்ளது.

ESIC Job Vacancy Notification 2024 -ன் படி இந்த நிறுவனத்தில் பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் உள்ளது. இந்த பணியிடத்திற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பில் உள்ள கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அனைத்து தகவல்களும் இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது.

பணியாளர்கள் மாநில காப்பீட்டு நிறுவனம் (ESIC) வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி ஒரு Junior Engineer (Electrical) பதவிக்கான காலி பணியிடம் உள்ளன. இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு ESIC -ன் அதிகாரப்பூர்வ www.esic.nic.in இணையதள பக்கத்தில் (ESIC Official Website) பதிவிடப்பட்டுள்ளது.

ESIC Chennai Recruitment படி இளநிலை பொறியாளர் (மின்சாரம்) பதவி விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE/B. Tech அல்லது எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ESIC Jobs Notification 2024 -ன் படி இந்த Junior Engineer (Electrical) வேலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 64 ஆகும். மேலுள்ள கல்வி தகுதி மற்றும் வயது வரம்பிற்குட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும். அதன் பிறகு காலியாக உள்ள இளநிலை பொறியாளர் (மின்சாரம்) பதவிக்கு தகுதியான நபர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

நேர்முகக்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் Junior Engineer (Electrical) பதவிக்கு மாதச் சம்பளமாக ரூபாய் 33,630/- தரப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ESIC Job Vacancy -க்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் ஆஃப்லைன் மூலம் வரும் 25.04.2024 முதல் 15.05.2024 ஆம் தேதிக்குள் உங்கள் விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்தை (Application Form) அனுப்ப வேண்டிய முகவரி: பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம், பிராந்திய அலுவலகம், பஞ்சதீப் பவன், 143 ஸ்டெர்லிங் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை – 600 034.

ESIC நிறுவனத்தில் உள்ள காலி பணியிடம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள பணியாளர்கள் மாநில காப்பீட்டு நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு அதிகாரபூர்வ அறிவிப்பை (Employees State Insurance Corporation (ESIC) Official Notification) முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளவும்.

மாதம் 33,630/- சம்பளத்துக்கு மாநில காப்பீட்டு நிறுவனத்தில் மத்திய அரசு வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…

ESIC நிறுவனத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது (ESIC Recruitment 2024).

Salary: 33630

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-25

Posting Expiry Date: 2024-05-15

Employment Type : FULL_TIME

Hiring Organization : Employees State Insurance Corporation (ESIC),

Organization URL: www.esic.nic.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, Employees State Insurance Corporation, Regional Office, Panchdeep Bhavan, 143 Sterling Road, Nungambakkam, Chennai , 600 034, India

Education Required:

  • Bachelor Degree
  • Professional Certificate

மேலும் படிக்க: மத்திய அரசு அதிகாரி ஆக வேண்டுமா? UPSC வழங்கிய உதவி கமாண்டன்ட் வேலை வாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular