Homeதொழில்நுட்பம்ஒரு Aadhaar Card மூலம் எத்தனை SIM கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது? கண்டுபிடிப்பது எப்படி?

ஒரு Aadhaar Card மூலம் எத்தனை SIM கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது? கண்டுபிடிப்பது எப்படி?

Aadhaar card என்பது இந்தியர்களின் அடையாள ஆவணங்களில் மிகவும் முக்கியமான ஆவணமாகும். எனவே ஒருவரின் வங்கி கணக்கு, பான் கார்டு, ரேஷன் கார்டு, மின்சார வாரியம் மேலும் பல விஷயங்களுடன் ஆதார் கார்டு இணைப்பை இந்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதுமட்டும் இன்றி ஒரு SIM கார்டு வாங்குவதற்கு கூட ஆதார் கார்டு தேவைப்படுகிறது.

ஒருவர் வாங்கும் SIM card எண் ஆனது அவரது ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டு இருக்கும். இந்திய தொலைத்தொடர்புத் துறையின் விதிகளின் படி ஒரு ஆதார் கார்டு மூலம் 9 சிம் கார்டு வாங்க முடியும், அதை அந்த ஆதார் கார்டு வைத்திருப்பவரே பயன்படுத்த வேண்டும். ஆனால் சமீப காலமாக போலி ஆதார் கார்டுகள் மூலம் பல சிம் கார்டுகள் வாங்கப்படுகின்றன. உங்களின் ஆதார் கார்டு மூலம் வாங்கப்படும் போலி சிம் கார்டுகளால் உங்களின் தனிநபர் தகவல்கள் திருடப்படும் வாய்ப்புள்ளது.

போலி சிம் கார்டுகளை கண்டுபிடிக்கும் வழி

உங்கள் ஆதார் கார்டு பெயரில் எத்தனை SIM கார்டுகள் வாங்கப்பட்டுள்ளன என்பதனை தெரிந்துகொள்ள தொலைத்தொடர்புத் துறையின் (Department of Telecommunications) tafcop.sancharsaathi.gov.in என்ற இணையதளப் பக்கத்தை பார்க்க வேண்டும்.

How Many SIM cards are there in your Aadhaar card
  • அதில் உங்கள் மொபைல் எண் மற்றும் Captcha உள்ளிடவும்.
  • உங்கள் மொபையில் எண் -க்கு OTP வரும் அதை உள்ளிட்ட பிறகு Login செய்யவும்.
  • உங்கள் Aadhaar கார்டுடன் இணைக்கப்பட்ட SIM card பட்டியல் வரும்.
  • அதில் நீங்கள் பயன்படுத்தாத Mobile Number இருந்தால் அதை Click செய்து ‘Not My Number’ என்பதை Click செய்து, தொலைத்தொடர்புத் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

ஆதார் கார்டின் முக்கியத்துவம்

ஆதார் கார்டில் தனிநபரின் பெயர், முகவரி, பிறந்த தேதி, கருவிழி, கைரேகை போன்ற பயோமெட்ரிக் தகவல் (Biometric information) உள்ளன. அதுமட்டும் இல்லாமல் ஒருவருக்கு பான் கார்டு, வங்கி கணக்கு, ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் போன்றவற்றை விண்ணப்பிப்பதற்கான அடையாள அட்டையாக ஆதார் கார்டு தேவைப்படுகிறது. அதனால் ஒருவர் தனது தனிப்பட்ட தகவல்களை மற்றவர் திருடாமல் இருக்க ஆதார் கார்டை கவனமாக பயன்படுத்துவது அவசியம்.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular