Homeசெய்திகள்பயணிகளுக்கு குட் நியூஸ்..! வெறும் ரூ. 150க்கு விமான டிக்கெட்... மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!

பயணிகளுக்கு குட் நியூஸ்..! வெறும் ரூ. 150க்கு விமான டிக்கெட்… மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!

நம்மில் பலருக்கும் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். பலர் விமானங்களில் சென்றிருப்போம். சிலருக்கு அது இதுவரையில் நிறைவேராமல் இருந்து இருக்கும். இது பல காரணங்கள் இருக்கலாம். அவர்களின் வீட்டு சூழ்நிலை போன்ற பல காரணங்களால் விமானங்களில் பயணிக்க முடியாமல் இருக்கலாம். எத்தனை காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணமாக இருப்பது விமான டிக்கெட் விலை (Flight Ticket Price) தான். இது மிகவும் அதிகமாக இருப்பது தான் பலரால் விமானத்தில் பயணிக்க முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம்.

இந்த நிலையில் தான் தற்போது மத்திய அரசின் முக்கிய திட்டம் பற்றி இப்பதிவில் பார்க்கவுள்ளோம். இத்திட்டத்தின் மூலம் வெறும் ரூ.150க்கு விமான டிக்கெட் (150 Rupees Flight Ticket) கிடைக்கும். இதனை உங்களால் நம்ப முடியாமல் கூட இருக்கலாம், ஆனால் அது தான் உண்மை. நம் இந்திய நாட்டில் சாலை மற்றும் ரயில் பயணங்கள் மிகவும் பொதுவான ஒன்று தான். ஆனால் விமான பயணம் என்பது அனைவருக்கும் மெய்ப்படுவது இல்லை.

வழக்கமாக ஒருவர் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்றால் குறைந்தபட்ச விமான டிக்கெட்டின் விலை 1000 ஆகும். இது போன்ற அதிக விலை காரணமாக ஏழை எளிய மக்கள் விமான பயணம் செல்வதை தவிர்த்து விடுகின்றனர். இதற்காக தான் மத்திய அரசு உடான் (UDAN) என்ற அற்புதமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகள் (150 Rupees Flight Ticket) விற்கப்படுகிறது.

இந்த உதான் திட்டம் (Udan Scheme) கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக நாட்டின் பல நகரங்களுக்கான விமான டிக்கெட்டுகளின் விலை குறைந்துள்ளது. மேலும் பிராந்திய இணைப்புத் திட்டம்-RCSகளில் பங்கேற்கும் விமான நிறுவனங்கள் 50 நிமிடங்களுக்கும் குறைவான பயண நேரம் கொண்ட வழித்தடங்களில் டிக்கெட் விலையை வெகுவாக குறைத்துள்ளன. இதற்காக இந்த உடான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இதன் காரணமாக குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகள் (The Cheapest Flight Ticket Price) கிடைக்கிறது.

இதன் அடிப்படையில் தான் அலையன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெறும் 150 ரூபாய்க்கு விமான டிக்கெட்டுகளை வழங்குகிறது. மேலும் அலையன்ஸ் ஏர்லைன்ஸ் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள தேஜ்பூர் மற்றும் லிலாபரி நகரங்களுக்கு இடையே வெறும் 150 ரூபாய்கு விமான டிக்கெட்டை விற்பனை செய்து வருகிறது.

Cheapest Flight Ticket Price

இந்த கட்டணத்துடன் ஜிஎஸ்டி போன்ற இதர வரிகளையும் சேர்த்தால் மொத்தக் கட்டணமாக ரூ.475 செலுத்தவேண்டும். எனினும் இந்த கட்டணம் சாதாரண மற்றும் நடுத்தர மக்களுக்கு பயணுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்: ரீ-ரிலீஸ் ஆகும் முன்பே வசூல் சாதனை படைத்த கில்லி…
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular