Homeசெய்திகள்தமிழகத்தில் தேர்தல் முடிந்தாலும்… சோதனைகள் தொடரும்…

தமிழகத்தில் தேர்தல் முடிந்தாலும்… சோதனைகள் தொடரும்…

மக்களவை தேர்தல் நேற்று தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் நடந்து முடித்தது. இந்த மக்களவை தேர்தலின் முதல் கட்டமாக தமிழகத்தில தேர்தல் முடிந்திருந்தாலும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இன்னும் தேர்தல் நடக்கவில்லை. அதன் காரணமாக பறக்கும் படை சோதனைகள் தொடரும் என தமிழக தேர்தல் ஆணைய தலைவர் கூறியுள்ளார்.

18 வது மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம், புதுச்சேரி போன்ற பல இடங்களில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் புதிய வாக்காளர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் அவர்களின் விருப்பத்திற்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு வாக்களித்தனர். தமிழகத்தில் மொத்த வாக்குகளின் 69.46 சதவீதம் ஆகும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று மக்களவை தேர்தல் (Parliment Election 2024) நிறைவடைந்திருந்தாலும். கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இன்னும் மக்களவை தேர்தல் நடைபெறவில்லை. எனவே தமிழகத்தில் பறக்கும் படை சோதனை தொடரும் என தமிழக தேர்தல் ஆணைய தலைவர் (Tamilaga Therthal Anaya Thalaivar)சத்ய பிரதா சாகுர் தெரிவித்துள்ளது.

இது குறித்து அவர் கூறியதாவது, தமிழகத்தில் தேர்தல் முடிந்துவிட்டதால் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பல இடங்களில் தேர்தல் சோதனையில் ஈடுபட்டு வந்த தேர்தல் பறக்கும் படையின் (Parakkum Padai Sothanai) கண்காணிப்புக் குழுக்களை கலைக்க இருக்கிறோம். இதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் மற்ற மாநிலங்களில் இன்னும் மக்களவை தேர்தல் முடிவுற்ற நிலையில் கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழ்நாடு மாவட்டங்களின் எல்லைகளில் மற்றும் அந்த மாவட்டங்களில் மட்டும் தேவைக்கு ஏற்பதேர்தல் பறக்கும் படை கண்காணிப்புக் குழுக்கள் செயல்படும் எனவும் சத்ய பிரதா சாகு (Sathya Pratha Sahoo) தெரிவித்துள்ளார்.

Election Commission in Tamil Nadu
மேலும் படிக்க: Lok Sabha election: அரசியலில் இருந்து விலக தயார்..! பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular